ஜஸ்ட் டயல்
ஜஸ்ட் டயல், (JustDial) (BSE:535648) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தொலைபேசி, இணையதளத் தேடுதல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் தொடங்கப்பட்டது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தை நிறுவியவர் வி. எஸ். எஸ் மணி ஆவார். அவரே தற்போது நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராகவும் விளங்குகிறார்.
Screenshot ஜஸ்ட்டயல்.காம்- இணையதளப் பக்கம் ஜுலை 01, 2012 | |
| நிறுவன_வகை | பொது |
|---|---|
| பங்கு வணிகத்தில் | முபச: 535648
தேபச: JUSTDIAL |
| சேவை பகுதி | 240 நகரங்கள்[1] |
| நிறுவனர்(கள்) | விஎஸ்எஸ் |
| வலைத்தளம் | www |
| அலெக்சா தரவரிசை எண் | |
| வலைத்தள வகை | உள்நாட்டு தேடுபொறி |
| மொழிகள் | பன்மொழி |
| துவக்கம் | 16 பெப்ரவரி 1996[3] |
| தற்போதைய நிலை | இயக்கத்திலுள்ளது |
இந்த நிறுவனம் விளம்பரச் சேவைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தாங்கள் வேண்டும் சேவையையோ, பொருளையோ கூறினால், அதனை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை அவர்களுக்கு அனுப்பும். 2018 ஆம் ஆண்டின் படி இந்நிறுவனம் 11,500 ஊழியர்களை கொண்டுள்ளது. மேலும் 2019 ஆண்டின் கணக்கின் படி இந்நிறுவனம் நாளொன்றுக்குச் சராசரியாக 19 லட்சம் அழைப்புகளைப் பெறுகிறது. ஜஸ்ட் டயல் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுல்லது. இந்நிறுவனத்தின் தொலைபேசி எண் 08888888888 ஆகும்.justdial India No.1 Local Search Engine..
மேற்கோள்கள்
- ↑ "America Calling". business.outlookindia.com. Retrieved 2012-07-09.
- ↑ "Justdial.com Site Info". அலெக்சா இணையம். Archived from the original on 2016-03-05. Retrieved 2015-04-06.
- ↑ "Whois justdial.com". Whoisdomain.me. Retrieved 2012-07-09.