ஜிடிகே+
ஜிடிகே+ - ஜிம்ப் டூல்கிட் (GTK+ - GIMP Toolkit) வரைகலை பயனர் இடைமுகப்பை உருவாக்க உதவும் ஒரு விட்ஜட் (widget) டூல்கிட் ஆகும். X விண்டோ(window) அமைப்பில் பயன்படுத்தப்படும் டூல்கிட் வகைகளில் இது மிக முக்கியமானதாகும். இது 1997-ம் ஆண்டு ஸ்பென்சர் கிம்பல்(Spencer Kimball) மற்றும் பீட்டர் மாட்டிஸ்(Peter Mattis)ஆகியோரால் குனூ பட கையாலல் நிரலுக்காக(ஜிம்ப்)(GIMP-GNU Image manipulation Program) உருவாக்கப்பட்டது.
| உருவாக்குனர் | குநோம் அறநிறுவனம் |
|---|---|
| தொடக்க வெளியீடு | ஏப்ரல் 14, 1998 |
| மொழி | சி |
| இயக்கு முறைமை | பன்இயக்குதளம் |
| தளம் | பன்இயக்குதளம் |
| கோப்பளவு | 18 மெகாபைட்டு |
| கிடைக்கும் மொழி | பன்மொழி |
| உருவாக்க நிலை | உயிர்ப்பு |
| மென்பொருள் வகைமை | Widget toolkit |
| உரிமம் | GNU LGPL பதிப்பு 2.1 |
| இணையத்தளம் | www |
ஜிடிகே+ சி மொழியில் எழுதப்பட்ட ஒரு பொருள்நோக்கு விட்ஜட் டூல்கிட் ஆகும். ஜிடிகே+, சி மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் பிற நிரலாக்கல் மொழிகளுடன் இணைக்கும் வண்ணம் இணைப்பிகளைக்(language bindings) கொண்டுள்ளது. அவற்றுல் சில
| நிரலாக்கல் மொழி | இணைப்பி |
|---|---|
| சி++ | ஜிடிகேஎம்எம்(gtkmm) |
| சி# | ஜிடிகே#(Gtk#) |
| ஜாவா | ஜாவா-குனோம்(java-gnome) |
| பிஃஎச்பி(php) | பிஃஎச்பி-ஜிடிகே(php-Gtk) |
| பெர்ள்(perl) | பெர்ல்-ஜிடிகே(perl-Gtk) |
| பைத்தான்(python) | பைஜிடிகே(PyGtk) |
| ரூபி(Ruby) | ரூபி-ஜிடிகே2(Ruby-gtk2) |
சி மொழியில் அமைந்த விண்டோ(window) உருவாக்கதிற்கான ஒரு எளிய ஜிடிகே+ நிரல்:
#include<gtk/gtk.h>
int main(int argc, char *argv[]){
GtkWidget *window;
gtk_init(&argc,&argv[]);
window=gtk_window_new(GTK_WINDOW_TOPLEVEL);
gtk_window_set_title(GTK_WINDOW(window),"வணக்கம்"); /* தமிழில் தலைப்பு வர ஒருங்குறி(Unicode) எழுத்துருக்கள் இருக்கவேண்டும் */
g_signal_connect(window, "destroy", G_CALLBACK(gtk_main_quit),NULL);
gtk_widget_show(window);
gtk_main();
return 0;
}
மற்ற சில டூல்கிட் வகைகள்
- எஃப்எல்டிகே(FLTK)
- க்யூடி(Qt)