ஜி ஆர் - 3 (நெல்)
ஜி ஆர் - 3 (GR-3) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகியகால நெல் வகையாகும்.[1] சூன் - சூலை மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 100 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. நாவாகோன் 19 (Nawagaon 19) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 9 - 60 (IR 9-60) எனும் நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகை, நேரடி, மற்றும் நடவு என இருமுறைக்கும் ஏற்றதாகும். 90 செ. மீ, குள்ள தானியத்தை கொண்டுள்ள இந்நெல் இரகம், மேற்கிந்திய பகுதியான குசராத்து மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
| ஜி ஆர் - 3 GR-3 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| நாவாகோன் 19 x ஐஆர் 9 - 60 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 100 - 105 |
| வெளியீடு |
| 1978 |
| மாநிலம் |
| குசராத்து |
| நாடு |
சான்றுகள்
- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page: 2". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-07-13.