ஜெயராணி
ஜெயராணி (Jeyarani) ஒரு இந்திய ஊடகவியலாளர் எழுத்தாளர், புகைப்பட கலைஞர் ஆவார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணிபுரிந்து வரும் இவர், விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தன்னுடைய எழுத்து மற்றும் புகைப்படம் வழியாக பதிவு செய்துள்ளார்.[1]
ஜெயராணி மீனாமயில் | |
|---|---|
| பிறப்பு | அழகன்பட்டி கிராமம், திண்டுக்கல் மாவட்டம் |
| தொழில் | புகைப்பட இதழியலாளர் |
| மொழி | தமிழ் |
| தேசியம் | இந்தியன் |
| கல்வி | முதுகலை இதழியல் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | பெரியார் விருது, விடுதலை வேர் விருது, தமிழ் கனலி செயற்பாட்டாளர் விருது, எழுச்சி தமிழர் விருது |
இளமைக் காலம்
இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அழகன்பட்டி கிராமத்தில் 1978 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் வசந்த மீனா, மயில்வாகனன். இவருடைய பாட்டி ஏ. எஸ். பொன்னம்மாள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இளம் வயதில் பெற்றோரை இழந்த ஜெயராணி, பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். இவர் மதுரை மீனாட்சிக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியமும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியலும் கற்றார்.[2]
பணி விவரக் குறிப்புகள்
23 ஆண்டுகளாக பத்திரிகையாளராகப் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணிபுரிந்து வருகிறார். சாதியம், பெண்ணியம், மனித உரிமைகள் சார்ந்து எண்ணற்ற செய்திக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். குமுதம், ஆனந்தவிகடன், இந்தியா டுடே, தினமலர், புதிய வாழ்வியல் போன்ற அச்சு ஊடகங்களிலும் சன் தொலைக்காட்சி, புது யுகம் போன்ற காட்சி ஊடகங்களிலும் பணிபுரிந்தவர். த ஒயர், நியூஸ் மினிட், நேஷனல் ஹெரால்டு, தி அவுட்லுக் போன்ற ஆங்கில ஊடகங்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின்றன.[3] ஆறாம் திணை, ஒன் இந்தியா தமிழ், விகடன்.காம் போன்ற இணைய இதழ்களிலும் எழுதியுள்ளார்.[4]
2001 ஆம் ஆண்டு குமுதம் இதழில் பணிபுரிந்த போது ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவி மேனகாவின் படுகொலை, சென்னை கே.கே. நகரில் குடிசைகள் அகற்றம் உள்ளிட்ட செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
2001-2003 ஆண்டுகளில் ‘அவள் விகடன்’ இதழில் கிராமப்புற பெண்களை மையப்படுத்திய ஐம்பதுக்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
2003 - 2005 ஆண்டுகளில் ‘ஆனந்த விகடனில்’ விளிம்புநிலை மக்களிடையே பணியாற்றி வரும் சமூகப் போராளிகள், சேவகர்கள் குறித்த ‘’வெளிச்சம்’’ என்ற தொடரை எழுதினார்.
2011-2013 ஆண்டுகளில் ‘இந்தியா டுடே’ இதழில் மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களின் அவல வாழ்வு குறித்து விரிவானக் களப்பணி செய்து செய்திக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.[5]
சன் தொலைக்காட்சியின் நிஜம் நிகழ்ச்சியில் விளிம்பு நிலை வாழ்வு குறித்து பல செய்தி ஆவணப் படங்களைப் பதிவு செய்துள்ளார்.
2017ஆம் ஆண்டு மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவுக்கு எதிராக 'மஞ்சள்' என்ற நாடகத்தை எழுதி இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களின் முன்னிலையிலும் காட்சிப்படுத்தினார்.[6]
2020ஆம் ஆண்டு கொரானா காலத்தில் தலித் மக்கள் எதிர்கொண்ட வன்கொடுமைகள், தலித் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் போன்றவை இவர் எழுதிய கட்டுரைகளில குறிப்பிடத்தக்கவை.
எழுதிய நூல்கள்
பெற்ற விருதுகளும் அங்கீகாரமும்
- 2004 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்களின் ஜமாத் உரிமை குறித்த செய்திக் கட்டுரைக்காக, பன்னாட்டு பத்திரிகையாளர் கூட்டமைப்பின் பாராட்டுச் சான்றிதழ் (International Federation of Journalists Commendation Certificate 2004) இவருக்கு வழங்கப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டு இந்தியா டுடே இதழ் ’’தேசிய அளவில் சமூகத்தில் தாக்கத்தை உண்டாக்கும் 30 பெண்களில் ஒருவராக’’ இவரை தேர்ந்தெடுத்தது.
- 2010 ஆம் ஆண்டு மதர் தெரஸா பல்கலைக்கழகம் ’காட்சி ஊடகத் துறையில் பொறுப்பானப் பங்களிப்பு’ என்ற விருதை இவருக்கு வழங்கியது.
- 2013 ஆம் ஆண்டு தொன் போஸ்கோ நிறுவனத்தின் ஊடக அறம் விருதை இவர் பெற்றார்.
- 2015 ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலுக்கு சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கான ‘விகடன்’ விருது வழங்கப்பட்டது.
- 2015 ஆம் ஆண்டு அதே நூலுக்காக கனடா தமிழ் தோட்ட விருது பெற்றார்.
- 2012 ஆம் ஆண்டு குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் விளிம்புநிலை எழுத்துப் பணிக்காக மதுரை தலித் ஆதார மய்யத்தின் 'விடுதலை வேர்' விருது
- 2016 ஆம் ஆண்டு துடி அமைப்பின் ’அம்பேத்கர் பேரொளி’ விருது.
- 2017 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ’பெரியார் விருது’
- 2017 ஆம் ஆண்டு மலமள்ளும் இழிவுக்கு எதிரான மஞ்சள் நாடகத்திற்கான விகடன் விருது
- 2019 ஆம் ஆண்டு 'உங்கள் குழந்தை யாருடையது?’ வாசகசாலை அமைப்பின் சிறந்த கட்டுரை தொகுப்பு விருது.[5]
- 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் தலித் மக்களின் நிலையையும் எழுதியதற்காக இந்திய அளவில் "உண்மையை உரக்கப் பேசும்" 14 பத்திரிகையாளர்களில் ஒருவராக feminismindia.com இணையதளம் இவரை தேர்ந்தெடுத்தது.[10]
- 2023 ஆம் ஆண்டு சமரசமற்ற ஊடகப் பணிக்காக காரைக்குடி போதி இலக்கிய சந்திப்பின் சிறந்த கட்டுரையாளர் விருதைப் பெற்றார்.
- 2025 ஆம் ஆண்டு மே 17 இயக்கம் வழங்கிய தமிழ் கனலி செயற்பாட்டாளர் விருது வழங்கி இவரை பெருமைப்படுத்தியது.[11]
- 2025 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறந்த சிறுகதை தொகுப்பிற்கான 'எழுச்சித் தமிழர் விருது' இவரின் செந்நிலம் நூலுக்கு வழங்கப்பட்டது.[12]
மேற்கோள்கள்
- ↑ "ஜெயராணி". Ethir Veliyeedu (in ஆங்கிலம்). Retrieved 2025-04-02.
- ↑ Kalaignar TV News (2019-01-24), ”சொற்களை விடவும் செயல்களை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்”- எழுத்தாளர் ஜெயராணி| NaanAanathuEpadi, retrieved 2025-04-02
- ↑ "The Wire: The Wire News India, Latest News,News from India, Politics, External Affairs, Science, Economics, Gender and Culture". thewire.in. Retrieved 2025-04-03.
- ↑ கி.ச.திலீபன் (2022-03-09). "``ஊடகத்துறையில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை!" - எழுத்தாளர் ஜெயராணி". www.vikatan.com/. Retrieved 2025-04-02.
- ↑ 5.0 5.1 5.2 ஜெயராணி, ஜெயராணி (2023). எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை - சமகால தமிழக சிக்கல்கள் குறித்த செய்திக் கட்டுரைகள் (1st ed.). ஹெர் ஸ்டோரிஸ்.
- ↑ REACH ONE (2017-06-30), MANJAL Stage Play மஞ்சள் மேடை நாடகம்| Pa. Ranjith, retrieved 2025-04-02
- ↑ Shruti TV (2018-12-24), சிறந்த கட்டுரைத் தொகுப்பு - உங்கள் மனிதம் ஜாதியற்றதா? | ஜெயராணி | வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள், retrieved 2025-04-02
- ↑ ஜெயராணி, ஜெயராணி (2020). உங்கள் குழந்தை யாருடையது (1st ed.). எதிர் வெளியீடு.
- ↑ News7 Tamil PRIME (2025-01-07), எழுத்தாளர் ஜெயராணி எழுதிய செந்நிலம் புத்தகம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது |Writer Jayarani, retrieved 2025-04-02
{{citation}}: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Chandwani, Vasudha (2020-12-24). "14 Powerful Journalists Who Spoke Truth To Power In 2020". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-04-02.
- ↑ unwritten history of tamilnadu (2025-03-17), எழுத்தாளர் ஜெயராணி செயல்பாட்டாளர் தமிழ் கனலி விருது ஏற்புரை. தோழர் திருமுருகன் காந்தி பாராட்டுரை, retrieved 2025-04-02
- ↑ Neelam Social (2025-03-21), என் கதாப்பாத்திரங்கள் திருப்பி அடிக்கும் | writer Jayarani | sennilam short story | Award | VCK, retrieved 2025-04-02