ஜோதி சித்தா (Jhoti chita) என்பது ஒடிசா கிராமப்புறங்களில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ள பாரம்பரிய ஒடியா வெள்ளை கலை வடிவமாகும். இது அரிசி மாவினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. ஒரு குச்சியில் கட்டப்பட்ட துணி ஒன்றின் துணைகொண்டு அழகான வடிவங்கள் வரையப்படுகின்றன.[1] பெரும்பாலும் தமிழர்கள் கோலமிடுவது போன்று கைவிரல்களைப் பயன்படுத்தியும் ஜோதி சித்தாவினைத் தயாரிக்கிறார்கள். ஜோதி சித்தா வரைவதற்கு, விரல்களை ஈர அரிசி மாவில் நனைத்து, தரையிலோ அல்லது சுவர்களிலோ சிக்கலான வடிவங்களைக் வரைவார்கள்.[2] சில சமயங்களில், நன்றாக கரைக்கப்பட்ட அரிசி மாவு கலவையினை சுவர்களில் தெளிப்பார்கள். இதன் மூலம் நெல் கொத்துகள் போன்ற ஒரு வடிவம் சுவரில் வெளிப்படுகிறது. தானியச் சேமிப்பு கலன்கள், வீட்டுத் தெய்வங்களுக்கான சிறிய பந்தல்கள், வீடுகளின் வாசலில், திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மண் பானைகள் ஆகியவற்றிலும் சித்தா வடிவங்கள் வரையப்படுகிறது.[3]

ஜோதி சித்தா
வகைஒடியா கலை
ஆக்கப் பொருள்அரிசி மாவு

திருமணம், மனபாச குருபரா,[4] இராஜா போன்ற பல்வேறு பண்டிகைகளுக்காக ஜோதி சித்தா வரையப்படுகின்றன.

பாரம்பரிய ஜோதி சித்தா வடிவங்கள் புடவையின் முந்தானை வடிவங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.[5][6]

மேற்கோள்கள்

  1. "Jhooti, Gurubara Chitta – Rangoli:- A Symbol of Traditional Odia Culture: Margasira Masa Sesa Gurubar #Odisha #Festival #Odia". eodisha.org. Archived from the original on 2 October 2016. Retrieved 29 September 2016.
  2. "Chita on the floor OdishaChannel.com". odishachannel.com. Retrieved 29 September 2016.
  3. https://odisha.gov.in/odisha-tourism/jhotichitamuruja
  4. "Manabasa Guru Bara and Lakshmi Puja". odialive. 13 December 2012. Retrieved 29 September 2016.
  5. "Arts and Crafts of Odisha, Sand Art of Orissa, Puri – Silver Filigree Work of Cuttack". www.nuaodisha.com. Retrieved 29 September 2016.
  6. "Odisha Government Portal". www.odisha.gov.in. Retrieved 29 September 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜோதி_சித்தா&oldid=381502" இலிருந்து மீள்விக்கப்பட்டது