ஜோஷ் புரோலின்
ஜோஷ் புரோலின்' (Josh Brolin, பிறப்பு: பெப்ரவரி 12, 1968 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1984ஆம் ஆண்டு முதல் தி குயோனீஸ் (1985), மிமிக் (1997), அமெரிக்க கேங்க்ஸ்டர் (2007), வெ (2008), மில்க் (2008), டெட்பூல் 2 (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்[1][2] (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகர் ஆவார். இவர் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான தானோஸ் என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் எதிர்மறைகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
| ஜோஷ் புரோலின் | |
|---|---|
| பிறப்பு | யோசுவா ஜேம்ஸ் புரோலின் பெப்ரவரி 12, 1968 சாந்தா மொனிக்கா ஐக்கிய அமெரிக்கா |
| கல்வி | டெம்பிள்டன் உயர்நிலை பள்ளி சாண்டா பார்பரா உயர்நிலை பள்ளி |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1984–இன்றுவரை |
| பெற்றோர் | ஜேம்ஸ் புரோலின் (தந்தை) ஜேன் கேமரூன் அகேய் (அம்மா) (இறந்துவிட்டார்) |
| வாழ்க்கைத் துணை | ஆலிஸ் அடேர் (தி. 1988; விவாகரத்து 1994) டயான் லேன் (தி. 2004; விவாகரத்து 2013) காத்ரைன் பாய்ட் (தி. 2016) |
| பிள்ளைகள் | 3 |
புரோலின் சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது, எம் டிவி போன்ற பல விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- ↑ "EXCLUSIVE: Josh Brolin To Play THANOS in 'Guardians of the Galaxy'". Latino Review. May 30, 2014. Archived from the original on May 31, 2014. Retrieved May 30, 2014.
- ↑ Taylor, Drew (August 5, 2013). "'Man of Steel 2' Casting: Is Josh Brolin a Frontrunner for Batman?". Moviefone.com. Archived from the original on August 18, 2017. Retrieved October 11, 2017.