டி. பி. மாதவன் (T. P. Madhavan, நவம்பர் 7,1935-அக்டோபர் 9,2024) மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். 40 வயதில் நடிக்கத் தொடங்கிய மாதவன், 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் முரண்பட்ட வேடங்களில் நடிப்பதற்காக அறியப்பட்ட இவர், தனது பிற்கால வாழ்க்கையில் நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் மாறினார்.

டி. பி. மாதவன்
படிமம்:T. P. Madhavan BNC (cropped).jpg
2015-இல் டி. பி. மாதவன்
பிறப்பு(1935-11-07)7 நவம்பர் 1935
திருவனந்தபுரம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
(நவீன கேரளம், இந்தியா)
இறப்பு9 October 2024(2024-10-09) (aged 88)
கொல்லம், கேரளம், இந்தியா
பணி
  • நடிகர்
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • பத்திரிக்கையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975–2016
பெற்றோர்
  • டாக்டர். என். பி. பிள்ளை
  • சரஸ்வதி
வாழ்க்கைத்
துணை
கிரிஜா மேனன்
பிள்ளைகள்2 பேர்
உறவினர்கள்

இளமை வாழ்க்கை.

டாக்டர் என். பி. பிள்ளை மற்றும் சரஸ்வதி ஆகியோரின் மூத்த மகனாக, 1935 நவம்பர் 7 அன்று பிரித்தானிய இந்தியாவில் திருவிதாங்கூர் இராச்சியத்தில் (நவீன கேரளாவின் திருவனந்தபுரம்) மாதவன் பிறந்தார். இவருக்கு நாராயணன் என்ற சகோதரரும், இராதாமணி என்ற சகோதரியும் இருந்தனர். இவரது தந்தை கேரளப் பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். மாதவன் இலக்கிய அறிஞர் பி. கே. நாராயண பிள்ளையின் பேரனும், நாடக ஆசிரியர் டி. என். கோபிநாதன் நாயரின் மருமகனும் ஆவார்.[1] டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]

இந்தியத் தரைப்படையில் சிறிது காலம் பணிபுரிந்த மாதவன் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியேறினார். பின்னர் மும்பையில் இந்தியன் எக்சுபிரசில் பத்திரிகையாளராகச் சேர்ந்தார். பின்னர் பெங்களூருக்கு குடிபெயர்ந்து ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். இறுதியில், கொல்கத்தாவில் குடிபெயர்ந்தார். இங்கிருந்தபடி திரைப்படத் துறையில் நுழைவதற்கு முயன்றார்.[3]

தொழில் வாழ்க்கை

மாதவன் தனது 40 வயதில் திரையில் அறிமுகமானார். ஆரம்பத்தில் எதிர்மறை வேடங்களில் நடித்ததற்காக அங்கீகரிக்கப்பட்ட இவர், பின்னர் நகைச்சுவைப் பாத்திரங்களுக்கும், இறுதியில் குணச்சித்திர வேடங்களுக்கும் மாறினார்.[4] கொல்கத்தாவில் பணிபுரிந்தபோது நடிகரும்-இயக்குனருமான மதுவுடன் நட்பு கொண்டார். பின்னர் பெங்களூரில் காமம் குரோதம் முகமது (1975) மற்றும் அக்கல்டாமா (1975) படப்பிடிப்பின் போது மதுவுக்கு உதவியாக இருந்தார். மாதவன் இந்த படங்களில் சிறிய வேடங்களில் அறிமுகமானார். அதன்பிறகு மலையாளப் படங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பாலச்சந்திர மேனன் இயக்கிய காளிகா (1980) படத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் ஓர் மாற்றுத்திறனாளியாக நடித்தார்.

1980கள் மற்றும் 1990களில் மலையாளத் திரைப்படங்களில் மாதவன் குறிப்பிடத்தக்கவராக இருந்தார்.[5] காளிக்காலம், நாடோடிக்கட்டு, வியட்நாம் காலனி, சந்தேசம், லேளம், அயல் கத எழுத்துக்காயன், நரசிம்மம், பாப்பாயுடே சுவந்தம் அப்பூஸ், புலிவால் கல்யாணம், அனந்தபத்ரம் ஆகியவை இவரது பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். ஒரு சில மலையாளத் தொலைக்காட்சி தொடர்களிலும்மாதவன் நடித்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையில், மாதவன் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[4] கடைசியாக பிரேதம் உண்டு சூக்சிக்குகா (2017) என்ற படத்தில் தோன்றினார்.

சொந்த வாழ்க்கை

மாதவன் கிரிஜா மேனன் என்பவரை மணந்தார். ஆனால் இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இவர்களுக்கு ராஜா கிருஷ்ண மேனன் என்ற மகனும், தேவிகா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் பாலிவுட் திரைப்படங்களில் திரைப்பட இயக்குனராக உள்ளார். [6][7] மாதவன் மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) முதல் பொதுச் செயலாளராக பணியாற்றினார். மேலும், 10 ஆண்டுகளாக இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்.[2]

மறதி இழப்பால் அவதிப்பட்டுவந்த மாதவன். தனது 88வது வயதில், 9 அக்டோபர் 2024 அன்று [[கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார்.[5]

விருதுகள்

தனது வாழ்நாள் சாதனைக்காக பிரேம் நசீர் விருது மற்றும் ராமு காரியாத் விருதைப் பெற்றுள்ளார்.[5]

மேற்கோள்கள்

  1. Livemint (9 October 2024). "Veteran Malayalam actor TP Madhavan dies of age-related ailments at 88". Mint. https://www.livemint.com/industry/media/veteran-malayalam-actor-tp-madhavan-dies-of-age-related-ailments-at-88-11728467881912.html. 
  2. 2.0 2.1 സ്വന്തം ലേഖകൻ (3 November 2015). "അഭിനയ ലോകത്തേക്ക് മടങ്ങാൻ‌ ടി.പി. മാധവനൊരുങ്ങുന്നു". மலையாள மனோரமா. https://www.manoramaonline.com/movies/movie-news/t-p-madhavan-return-to-film.html. 
  3. Jyothilal, G. (9 October 2024). "'ആദ്യ ശമ്പളം 175 രൂപ,കല്‍ക്കത്തയിലെ തെരുവില്‍വെച്ച് മധുവിന്റെ പിന്നില്‍ തട്ടി വിളിച്ചത് വഴിത്തിരിവ്'" (in ml). மாத்ருபூமி (இதழ்). https://www.mathrubhumi.com/movies-music/features/tp-madhavan-life-story-1.9972630. 
  4. 4.0 4.1 "Mollywood actor T P Madhavan passes away at 88". English.Mathrubhumi. 2024-10-09. Retrieved 2024-10-09.
  5. 5.0 5.1 5.2 "Veteran Malayalam actor TP Madhavan, first General Secretary of AMMA, dies at 88". Indian Express.
  6. "Facebook". www.facebook.com.
  7. "Mangalam-Varika-9-Sep-2013". mangalamvarika.com. Archived from the original on 12 September 2013. Retrieved 4 November 2013.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டி._பி._மாதவன்&oldid=383959" இலிருந்து மீள்விக்கப்பட்டது