தபசி மண்டல்
தபசி மண்டல் (Tapasi Mondal)(பிறப்பு 1 மார்ச் 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும் 2016 முதல் மேற்கு வங்காள ஹால்டியா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். 2020ஆம் ஆண்டில், இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[3] இவர் 2025-இல் அகில இந்திய திரிணாமுல் கட்சியில் இணைந்தார்.
தபசி மண்டல் | |
|---|---|
| உறுப்பினர்- மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2016 | |
| தொகுதி | ஹால்தியா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 மார்ச்சு 1972 |
| அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2025–முதல்) |
| பிற அரசியல் தொடர்புகள் |
|
தனிப்பட்ட வாழ்க்கை
மொண்டல், அர்ஜுன் குமார் மொண்டலை மணந்தார், மேற்கு வங்காளத்தின் புர்பா மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள துர்காச்சக் நகரில் வசித்துவருகிறார்.[4][5] இவர் சுதஹாட்டா லாபன்யபிரவா பாலிகா வித்யாலியாவில் தனது கல்வியைப் பெற்றார்.[5]
அரசியல்
2016 மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் இடது முன்னணிக் கூட்டணியின் வேட்பாளராக பர்பா மேதினிபூர் மாவட்டத்தின் ஹால்டியா தொகுதியிலிருந்து தபசி மொண்டல் போட்டியிட்டார்.[6] இந்தத் தேர்தலில் இவரது முதன்மை போட்டியாளரான அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு வேட்பாளரான மதுரிமா மண்டல் ஆவார்.[7] இந்தத் தேர்தலில் தபசி மொண்டல் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[2][6] 2020 திசம்பரில், பல திரிணாமுல் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சி சேர விரும்புவதாக இவர் அறிவித்ததை அடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[8][9]
மேற்கோள்கள்
- ↑ "Elected Members". West Bengal Legislative Assembly.
- ↑ 2.0 2.1 "West Bangal General Legislative Election 2016". Election Commission of India.
- ↑ Ganguli, Panchali (18 December 2020). "CPIM MLA Tapasi Mondal leaves LF to join BJP". Kolkata Today (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 7 February 2021.
- ↑ Mandal, Ananda (14 August 2018). "কালি লাগিয়েই ফিরলেন তাপসী" [Tapasi returned with ink]. Ananda Bazar Patrika (in Bengali). Retrieved 2020-11-15.
- ↑ 5.0 5.1 "Tapasi Mondal". myneta.info. Association for Democratic Reforms.
- ↑ 6.0 6.1 Bose, Pratim Ranjan; Law, Abhishek. "TMC embarrassed as 7 ministers lose". Business Line (in ஆங்கிலம்). The Hindu Group. Retrieved 2020-11-14.
- ↑ Roy, Esha; Ali, Arshad; Ghoshal, Anuraddha (2016-05-06). "West Bengal polls end, not the complaints". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2020-11-14.
- ↑ Kundu, Indrajit (18 December 2020). "Now, CPIM MLA says she will join BJP at Amit Shah rally on Saturday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2020-12-19.
- ↑ "Suvendu Adhikari ends all speculation, joins BJP, delivers jolt to Mamata and TMC". India Today. Retrieved 19 December 2020.