தவே கிரீன்
தவே கிரீன் (Dave Green) (பிறப்பு: 1959) ஐக்கிய இராச்சியத்திலுள்ள கேம்பிரிட்ஜ் நகர கேவண்டிழ்சு ஆய்வக வானியற்பியலாளரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் ஆவார். இவர் சர்ச்சில் கல்லூரி ஆய்வுறுப்பினரும் இயற்பியல் ஆய்வு இயக்குநரும் ஆவார். இவர் விண்மீன்களின் மீவெடிப்பு எச்சங்களைப் பற்றிய ஆய்வில் கவனத்தைக் குவிக்கிறார்; இந்த ஆய்வில்G1.9+0.3 மீவெடிப்பு ஆய்வும் இதுவரை கண்டறியாத மிக இளைய பால்வெளி மீவெடிப்பு எச்ச ஆய்வும் அடங்கும். இவர் எஃப். இரிச்சர்டு சுட்டீவென்சனுடன் இணைந்து வரலாற்றியலான மீவிண்மீன் வெடிப்பு குறித்த நூலொன்றை எழுதியுள்ளார்.
| டேவிடு ஏ. கிரீன் David A. Green | |
|---|---|
| பிறப்பு | 1959 (அகவை 66–67) |
| வாழிடம் | |
| தேசியம் | |
| துறை | வானியற்பியல் |
| பணியிடங்கள் | கேவண்டிழ்சு ஆய்வகம் |
| கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | சுட்டீவன் குல் |
பொழுதுபோக்கு
இவர் படகுபயிற்சி, துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Dave Green's homepage
- Dave Green's "Other Homepage"
- Historical Supernovae and Their Remnants by D.A. Green and F.R. Stephenson
- Dave Green Facts