தாவளம்
தாவளம் (Thaavalam) என்பது பண்டைக் காலத்தில் பெருவழிகளில் வணிகர், வீரர் போன்றோர் தங்கிச் செல்லும் இடமாகும்.[1] இதை வணிகர்கள் தங்கி வணிகப்பணிகளில் ஈடுபட்ட இடம் என்றும் கூறுவர். தென்னிந்தியாவில் மொத்தம் 64 தாவளங்கள் இருந்ததற்கான தகவல்கள் உள்ளன.[2]

பழந்தமிழகத்தில் இருந்த தாவளங்களில் நாவற்தாவளம், வேம்படித்தாவளம், மஞ்சப்புளி தாவளம், பட்டழையத் தாவளம், கடிகைத்தாவளம் ஆகிய தாவளங்களின் பெயர்கள் தெரியருகின்றன.[3] தாவளம் என்ற பெயரில் ஊர்களும் உள்ளன.[4] புகழ்பெற்ற அதியமான் பெருவழியானது நாவற்தாவளம் என்ற தாவளத்திற்கு போகும் பெருவழியாக இருந்தது. கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் வண்டித்தாவளம் என்ற பெயரிலான ஊர் உள்ளது. அங்கு ஒரு காலத்தில் தாவளம் இருந்ததால் அப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ agarathi.com. "தாவளம்". agarathi.com. Retrieved 2024-11-08.
{{cite web}}: Text "Tamil Dictionary" ignored (help); Text "அகராதி" ignored (help) - ↑ "கோயம்புத்தூரில் பழங்காலத்தில் யானை வணிகம் நடந்ததா? விவாதத்தை கிளப்பும் குமிட்டிபதி குகை ஓவியங்கள்". BBC News தமிழ். 2022-09-18. Retrieved 2025-02-24.
- ↑ "திருப்பத்தூர் - கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அதியமான் பெருவழிக் கல்வெட்டு கண்டெடுப்பு". Hindu Tamil Thisai. 2023-06-13. Retrieved 2025-02-24.
- ↑ "Thavalam Village , Krishnagiri Block , Krishnagiri District". www.onefivenine.com. Retrieved 2025-02-24.