தா. வீராசாமி
தா. வீராசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாகவும், 1984 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உணவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார்.[1]. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தாலுகாவின் வெள்ளுரில் எம்.தண்டவமூர்த்தி அதிகைமான், சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
தா. வீராசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | டி. எம். தைலப்பன் |
| பின்னவர் | எல். கணேசன் |
| தொகுதி | ஒரத்தநாடு |
| பதவியில் 1984–1989 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | செப்டெம்பர் 8, 1938 |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம்(s) | தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, |
| வேலை | அரசியல் |
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1980 | ஒரத்தநாடு | அஇஅதிமுக | 50.53 |
| 1984 | ஒரத்தநாடு | அஇஅதிமுக | 44.21[2] |
மேற்கோள்கள்
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2018-02-22.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 676-678.
{{cite book}}: CS1 maint: year (link)