திபு கணவாய் (Diphu Pass) என்பது இந்தியா, சீனா மற்றும் மியன்மார் நாடுகளுக்கிடையில் மூன்று நாடுகளின் எல்லைகளும் சங்கமிக்கும் பிரச்சினைக்கு உட்பட்ட புள்ளியில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். திபு கணவாய் கிழக்கு அருணாசலப் பிரதேசத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.[1]. இக்கணவாய் மெக்மோகன் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது[2].

திபு கணவாய்
திபு கணவாய் is located in Myanmar
திபு கணவாய்
திபு கணவாய்
திபு கணவாய் இடவமைப்பு
ஏற்றம்4,587 மீ (15,049 அடி)
அமைவிடம்சீனாஇந்தியாபர்மா மும்முனை
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்28°9′0″N 97°20′0″E / 28.15000°N 97.33333°E / 28.15000; 97.33333

அக்டோபர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாத்த்தில் சீனா மற்றும் பர்மா நாட்டினர் திபு கணவாய்க்கான அவர்களின் எல்லையை வரையறுத்துக் கொண்டனர். இந்த எல்லை மலைத்தொடரின் நீர்பிடிப்பு பகுதிக்கு தெற்கே 5 மைல்கள் தள்ளி உள்ளது. இது இந்தியாவின் தூதரகம் சார்ந்த பிரச்சனையாக அமைந்தது, ஏனென்றால் இந்தியா, மும்முனை எல்லை நிர்பிடிப்பு பகுதியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது[3]. இப்பிரச்சனை, அருணாசலப் பிரதேசம் சார்ந்த இந்தியா மற்றும் சீனா எல்லை கருத்துவேறுபாட்டில் ஓர் அங்கமாக இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. Calvin, James Barnard (1984-04-02). "The China-India Border War (1962)". globalsecurity.org. Marine Corps Command and Staff College. Retrieved 2017-02-02. this placed Diphu Pass--a strategic approach to eastern Assam--in Chinese territory.
  2. Tzou, Byron N (1990). China and International Law: The Boundary Disputes. Greenwood Publishing Group. p. 128. ISBN 9780275934620. the so-called McMahon Line (that is, from Diphu Pass to Izrazi Pass)
  3. Eekelen, Willem van (2015-11-06). Indian Foreign Policy and the Border Dispute with China: A New Look at Asian Relationships. BRILL. p. 121. ISBN 9789004304314.
"https://tamilar.wiki/w/index.php?title=திபு_கணவாய்&oldid=395373" இலிருந்து மீள்விக்கப்பட்டது