திருச்சி - 5
திருச்சி - 5 (TRY 5) எனப்படும் இந்த நெல் வகை, திருச்சி - 2 நெல் இரகத்திலிருந்து மரபுப்பிறழ்வு முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் புதிய நெல் வகையாகும்.[1]
| திருச்சி - 5 TRY 5 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| திருச்சி - 2 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 127 நாட்கள் |
| மகசூல் |
| 5,100 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2022 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
காலம்
தமிழ்நாட்டின் குறுவை, நவரை மற்றும் தாமதத் தாளடி[2] ஆகிய நெற்பருவக் காலத்தில் பயிரிட ஏற்றதாக கூறப்படும் இந்நெல் இரகம், நடுத்தரக் காலத்திற்கு முன்பாக 127 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய நெல் இரகமாகும்.[1]
விளைச்சல்
இந்நெல் இரகத்தின் சாகுபடியில், சராசரியாக ஒரு எக்டேருக்கு சுமார் 5,100 கிலோ கூல மகசூல் தரக்கூடியது என கருதப்படுகிறது. மேலும் இது 64% அரைத்தல் மற்றும் 54% தலை நெல் மீட்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[2]
வெளியீடு
இந்த நெல் இரகத்தை, TNAU கீழ் இயங்கிவரும், திருச்சி நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள "அன்பில் பி. தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute (ADACRI) 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
முக்கிய அம்சங்கள்
நீண்ட மற்றும் மெல்லிய வெள்ளை அரிசியை கொண்டுள்ள இது, நல்ல சமையல் தரம் கொண்ட சோறு மற்றும் இட்லி தயாரிப்புகளுக்கு ஏற்றது என கூறப்படுகிறது. பூஞ்சை நோயான பழுப்பு நிற புள்ளி, குலைநோய், பழுப்பு நிற தாவரத் தவளை (BPH), வெள்ளை முதுகு கொண்ட தாவரத் தத்துப்பூச்சி (WBPH) மற்றும் பச்சை இலைத் தத்துப்பூச்சி (GLH) ஆகிய பயிரின் இடையூறுகளுக்கு, மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.[1] மேலும் உப்புத்தன்மையுள்ள நிலங்களை பொறுத்துக்கொள்ளும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.[3]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Season and Varieties :: Rice - Rice TRY 5". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2008 - 2023. Retrieved 2025-11-22.
- ↑ 2.0 2.1 2.2 "TNAU Released New Crop Varieties for 2022 - 4. Rice TRY 5 - Page: 3" (PDF). www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 09.02.2022. Retrieved 2025-11-22.
- ↑ Technologies Developed - TRY 5 Rice