திருநாரையூர்
திருநாரையூர் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில் திருநாரையூர் அமைந்துள்ளது.
இத்திருநாரையூரில் சௌந்தரநாத கோவில் உள்ளது. தேவாரத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பிறந்த ஊர் இதுவாகும்.