| தொகைச்சொல்
|
விரி
|
| முப்பழம்
|
- வாழை,
- மா,
- பலா
|
| மூவகைச் செயல் வழக்கம்
|
- செய்தல்,
- செய்வித்தல்,
- உடன்படல்
|
| மும்மை
|
- உம்மை,
- இம்மை,
- மறுமை
|
| முப்பொறி
|
- மனம்,
- வாக்கு,
- காயம்
|
| முக்காலம்
|
- இறந்த காலம்.
- நிகழ்காலம்,
- எதிர் காலம்
|
| முத்தொழில்
|
- படைத்தல்,
- காத்தல்,
- அழித்தல்
|
| மூவிடம்
|
- தன்மை,
- முன்னிலை,
- படர்க்கை
|
| மூவுலகம்
|
- பூமி,
- அந்தரம்,
- சுவர்க்கம்
|
| முக்குற்றம்
|
- காமம்,
- வெகுளி,
- மயக்கம்
|
| முச்சுடர்
|
- ஞாயிறு,
- திங்கள்,
- தீ
|
| மூவகை மொழி
|
- பழித்தல்,
- புகழ்தல்,
- மெய் கூறல்
|
| மூவகை வேதத்தீ
|
- காருகபத்தியம், \\ சமையல் செய்யும் நெருப்பு
- தட்சிணாக்கினி, \\ சமையல் தீக்கு இடப்புறம் உள்ளது \\ புடையடுப்புத் தீ
- ஆகவநீயம் \\ வேள்வித் தீ
|
| மூவகை உயிர்த்தீ
|
- உதராக்கினி, \\ பசித்தீ,
- காமாக்கினி, \\ காமத்தீ,
- கோபாக்கினி \\ சினத்தீ
|
| முக்குணம்
|
- சாத்விகம், -- ஞானம், தவம், மெய்மை, மேன்மை, அருளுடைமை, புலனடக்கம் ஆகியவை
- இராசதம், -- தானம், தவம், மெய்மை, தருமம் பேணல்
- தாமதம் -- பேருண்டி, ஒடுங்கல், சோம்பல், மூரி, காமம், நீதி கேடு, நித்திரை, மறதி, தணியாக் கோபம், வஞ்சம்,
- அருள் இல்லாதவரிடம் அன்பு காட்டல் மூரி எனப்படும்
|
| மூவகைத் தானம்
|
- உத்தமம், -- தவமுடையார்க்கு அளிப்பது உத்தம தானம்
- மத்திமம், -- மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கல் மத்திம தானம்
- அதமம் -- பலன் கருதிக் கொடுத்தல் அதம தானம்
|
| திரிகடுகம்
|
- சுக்கு,
- மிளகு,
- திப்பிலி
|
| திரிபாலை
|
- கடுக்காய்,
- நெல்லிக்காய்,
- தான்றிக்காய்
|
| திரிபுரம்
|
- பொன்,
- வெள்ளி,
- இரும்பு - கோட்டைகள்
|
| சூரியனுக்கு உரிய மூவகை வீதி
|
- மேட வீதி, -- வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி - மாதங்களில் சூரியன் மேட ராசி வழியே செல்வான்.
- இடப வீதி, -- பங்குனி, சித்திரை, புரட்டாசி, ஐப்பசி - மாதங்களில் சூரியன் இடப ராசி வழியே செல்வான்.
- மிதுன வீதி -- கார்த்திகை, மார்கழி, தை, மாசி - மாதங்களில் மிதுன ராசி வழியே செல்வான்.
|