தொகைச்சொல் (4 பொருள்)

நிகண்டு நூல்கள் தொகையகராதி என்னும் தலைப்பில் தொகைச்சொற்கள் பலவற்றைச் சுட்டி அவற்றை விரித்துக் காட்டியுள்ளன. அவற்றில் சேந்தன் திவாகரம்[1], சூடாமணி நிகண்டு ஆகியவற்றறில் நான்கு பொருள்களைக் குறிக்கும் தொகைச்சொல் இங்கு விளக்கப்படுகிறது.

தொகைச்சொல் விரி

1

தொகைச்சொல் சேந்தன் திவாகர் விரி
நானிலம்
  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
சதுரங்கப்படை
  1. யானை
  2. தேர்
  3. குதிரை
  4. காலாள்
நாற்கரணம்
  1. மனம்
  2. புத்தி
  3. ஆங்காரம்
  4. சித்தம்
நாற்கதி
  1. உம்பர் (தேவர்)
  2. மக்கள்
  3. விலங்கு
  4. தேவர்
நால்வகை இழிச்சொல்
  1. பொய்
  2. குறளை
  3. கடுஞ்சொல்
  4. பயனில் சொல்

6

நால்வகை வேதம்
  1. இருக்கு
  2. தைத்திரியம்
  3. சாமவேதம்
  4. அதர்வண வேதம்
நால்வகை அரண்
  1. மலை-அரண்
  2. காட்டு-அரண்
  3. மதில்-அரண்
  4. நீர்-அரண்
நால்வகைக் கேள்வி
  1. அறம்
  2. பொருள்
  3. இன்பம்
  4. வீடு
  • இந்த நான்கினும் ஒத்து ஒழுகின் ஐவகை வேள்வி
நால்வகைப் புலமை
  1. கவி * ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் பாவகைகளைப் பாடுபவன் கவி எனப்படுவான்
  2. கமகன் * ஞாபகம் செம்பொருள் நடை ஆகிய இனப் பொருளைக் காசு இல்லாமல் உரைப்பவன் கமகன்
  3. வாதி * ஏதும் மேற்கோளும் காட்டி பிறர் சொல்லை மறுப்பவன் வாதி
  4. வாக்கி * அறம் பொருள் இன்பம் வீடு என்னும் திறங்கள்பற்றி இனிமையாகப் பிறர் விரும்புபடிக் கூறுபவன் வாக்கி எனப்படுவான்.
கவிப்புலமை
  1. ஆசுகவி * கொடுத்த பொருளில் தொடுத்து, இன்பம் உண்டாகும்படி, உடனே பாடுபவன் ஆசுகவி
  2. மதுரகவி * பொருளில் பொலிவும், சொல்லில் செல்வமும் தொடையும், தொடையில் விகற்பமும், துதைந்து, உருவகம் முதலாம் அலங்காரம் உட்கொண்டு, ஓசை பொலிவுற்று, உணர்வோர் உள்ளங்களுக்கு அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி.
  3. சித்திரக்கவி
  4. வித்தாரக்கவி * மும்மணிக் கோவையும், பன்மணி மாலையும், மறமும், கலிவெண்காட்டும், மடலூர்ச்சியும், கிரீடையும், கூத்தும், பாசண்டத் துறையும், விருத்தக் கவிதையும், இயல் இசை நாடகத்தொடு விரித்துப் பாடுவது வித்தாரக்கவி.

11

நால்வகைப் புண்ணியம்
  1. தவம்
  2. மேலாம் ஒழுக்கம்
  3. தானம்
  4. கல்வி
நால்வகை நிலை
  1. பைசாசம் * ஒரு காலை மடக்கி, ஒரு காலால் நிற்றல்
  2. ஆலீடம் * வலக்காலை மண்டலித்து இடக்காலை நீட்டி அமரல்
  3. மண்டிலம் * இரு காலையும் மண்டலித்து, சம்மணம் போட்டு அமர்தல்
  4. பிரத்தியாலீடம் * வலக்கால் முந்துற இடக்காலை மண்டலித்து அமர்தல்
நான்கு நிலைகளில் உயிர்த்தோற்றம்
  1. கருப்பை
  2. முட்டை
  3. நிலம்
  4. வியர்வை

மேற்கோள்

  1. பக்கம் 285 முதல்
"https://tamilar.wiki/w/index.php?title=தொகைச்சொல்_(4_பொருள்)&oldid=407630" இலிருந்து மீள்விக்கப்பட்டது