தொரப்பள்ளி
தொரப்பள்ளி ( Thorapalli ) அல்லது தொரப்பள்ளி அக்ரகாரம் என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]. இவ்வூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் ஒசூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒசூர்- கிருட்டிணகிரி சாலைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.
தொரப்பள்ளி தொரப்பள்ளி அக்ரகாரம் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 2,715 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635109 |

மக்கள் வகைப்பாடு
இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 2177 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 9849, இதில் 4669 பேர் ஆண்கள், 5180 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 72.16% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]
ஊரின் சிறப்பு
இந்த ஊரில்தான் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி பிறந்தார். அவர் பிறந்த வீட்டை நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரித்து வருகிறது.
மேற்கோள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. Retrieved 2015-07-19.
- ↑ http://www.census2011.co.in/data/village/643794-thorapalli-agraharam-tamil-nadu.html