நஞ்சனாபுரம்
நஞ்சனாபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
நஞ்சனாபுரம்
Nanjanapuram நஞ்சனாபுரம் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 11°18′52″N 77°39′37″E / 11.314500°N 77.660200°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
| ஏற்றம் | 239 m (784 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 638 107 |
| தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
| வாகனப் பதிவு | TN-56 yy xxxx |
| அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, திண்டல், நசியனூர், பவளத்தாம்பாளையம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி |
| மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
| மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
| மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
| சட்டமன்றத் தொகுதி | ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
| மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
| சட்டமன்ற உறுப்பினர் | சு. முத்துசாமி |
| இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 239 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நஞ்சனாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°18′52″N 77°39′37″E / 11.314500°N 77.660200°E (அதாவது, 11°18'52.2"N, 77°39'36.7"E) ஆகும். ஈரோடு, திண்டல், நசியனூர், பவளத்தாம்பாளையம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி ஆகியவை நஞ்சனாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். கொங்கு கலை அறிவியல் கல்லூரி, நஞ்சனாபுரத்தில் அமையப் பெற்றுள்ளது.[3]
நஞ்சனாபுரம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[4] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ Madras (India : Presidency) (1992). Alphabetical List of Villages in Taluks (in தெலுங்கு). Asian Educational Services. ISBN 978-81-206-0575-6.
- ↑ Gupta, Ed K. R. (2001). Directory of Libraries in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri. ISBN 978-81-7156-985-4.
- ↑ ஈரோடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள். தன்னனானே. 2003.
- ↑ "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. Retrieved 2023-02-04.