நந்தகம் என்பது திருமாலுடைய வாளின் பெயராகும். இந்த ஆயுதம் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாக கருதப்பெறுகிறது.[1] ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்பெறுகிறார்.[2]

படிமம்:Shivas Kinder - 0190.jpg
திருமாலின் பின் வலக்கையில் நந்தகம் வாள்

பத்தாந்திருமொழியில் பாடல் 111 ல் நாந்தக மேந்திய நம்பி சரணென்று என்ற வரி வருகிறது. இதற்கு நந்தகம் எனும் வடமொழிச்சொல்லே நாந்தகமாக நீண்டுகிடக்கிறது என ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி தனது உரையில் குறிப்பிடுகிறார். [3]

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=நந்தகம்&oldid=410674" இலிருந்து மீள்விக்கப்பட்டது