வரைபடத்தை ஏற்றுகிறது....

நயா சார் தீவு (Nayachar) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில், வங்காள விரிகுடாவில் அமைந்த தீவுப்பகுதியாகும். இத்தீவு சுந்தரவனக்காடுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவு மீன் பிடி தொழிலாளர்களின் குடியிருப்புகள் கொண்டது. முன்னர் மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்த இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் அரசாங்கம், இத்தீவில் சலீம் நிறுவ்னத்தினர் வேதியியல் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டது.[1] இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2011-இல் ஆட்சிக்கு வந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, நயா சார் தீவில் வேதியியல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. [2]

நயா சார் தீவு
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
தீவுக்கூட்டம்சுந்தரவனக்காடுகள்
நிர்வாகம்
இந்தியா
மக்கள்
மக்கள்தொகை2500
நயா_சார்_தீவு
நயா_சார்_தீவு

ஹல்டியாவிற்கும், நந்திகிராமுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த நயா சார் தீவுப்பகுதியை ஒரு சூழலியல் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு மேற்கு வங்காள அரசு திட்டம் தீட்டியுள்ள்து.[3]


மேற்கோள்கள்

  1. "Salim SEZs, 6 others given green signal". Calcutta, India: The Telegraph, 7 October 2006. 2006-10-07. http://www.telegraphindia.com/1061007/asp/frontpage/story_6837797.asp. 
  2. "Nayachar project scrapped". Retrieved 2011-09-15.
  3. Eco-tourism plans for Nayachar island

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நயா_சார்_தீவு&oldid=413492" இலிருந்து மீள்விக்கப்பட்டது