நாராயண்கஞ்ச்
- இக்கட்டுரை நாராயண்கஞ்ச் நகரைக் குறித்தது. நாராயண்கஞ்ச் மாவட்டம் வேறானது.
நாராயண்கஞ்ச் (வங்காளம்: নারায়ণগঞ্জ Naraeongônj) வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவை அடுத்துள்ள நகரமாகும். நாயண்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 220,000 ஆகும். சீதாலக்யா ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. நாராயண்கஞ்ச் ஆற்றுத்துறைமுகம் வங்காளதேசத்தின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். [1] சணல், துணி தொழில்களுக்கு வணிக மையமாக விளங்குகிறது.இங்குள்ள ஏராளமான சணல் ஆலைகளை ஒட்டி இது வங்காளதேசத்தின் டுண்டி எனப்படுகிறது. (டுண்டி சணல் தொழிலுக்கு புகழ்பெற்ற இசுக்கொட்லாந்திலுள்ள நகரமாகும்.)
நாராயண்கஞ்ச், வங்காளதேசம்
নারায়ণগঞ্জ | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| கோட்டம் | தாக்கா கோட்டம் |
| மாவட்டம் | நாராயண்கஞ்ச் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | நாராயண்கஞ்ச் மாநகராட்சி |
| • மேயர் | டா. சாலினா அயாத் ஐவி |
| பரப்பளவு | |
| • நகரம் | 759.57 km2 (293.27 sq mi) |
| • நீர் | 48.56 km2 (18.75 sq mi) |
| ஏற்றம் | 3 m (10 ft) |
| மக்கள்தொகை (2012) | |
| • நகரம் | 15,72,386 |
| • அடர்த்தி | 2,100/km2 (5,400/sq mi) |
| • பெருநகர் | 2.2 மில்லியன் |
| நேர வலயம் | ஒசநே+6 (வங்காளதேச நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 1400 |
| இடக் குறியீடு | 0671 |
| அழைப்புக் குறியீடு | 02 |
| இணையதளம் | நாராயண்கஞ்ச் |
மேற்சான்றுகள்
- ↑ "Narayanganj". banglapedia. Retrieved 2007-07-06.