நிக் கீர்யோசு
நிக்கலோசு இல்மி நிக் கீர்யோசு (Nicholas Hilmy "Nick" Kyrgios, 27 ஏப்ரல் 1995)[1] ஆத்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர். 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று போட்டியில் சிறுவர் ஒற்றையர் கோப்பையையும் விம்பிள்டன் கோப்பை போட்டிகளில் சிறுவர் இரட்டையர் கோப்பையையும் வென்றுள்ளார். 2014 விம்பிள்டனில் காலிறுதிக்கு எட்டியது இவரது சிறந்த சாதனையாக உள்ளது.
| படிமம்:Nick Kyrgios RG13 (6) (cropped).jpg 2013இல் ரோலண்டு காரோசில் நிக் கீர்யோசில் விளையாடும்போது | |
| முழுப் பெயர் | நிக்கலோசு இல்மி கீர்யோசு |
|---|---|
| நாடு | |
| வாழ்விடம் | மெல்பேர்ண், ஆத்திரேலியா |
| உயரம் | 1.96 m (6 அடி 5 அங்) (6 அடி 5 அங்) |
| தொழில் ஆரம்பம் | 2013 |
| விளையாட்டுகள் | வலது-கை (இரு-கை பின்னோக்காட்டம்) |
| பரிசுப் பணம் | $235,084 |
| இணையதளம் | nickkyrgios.org |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 3–7 |
| பட்டங்கள் | 0 |
| அதிகூடிய தரவரிசை | No. 144 (23 சூன் 2014) |
| தற்போதைய தரவரிசை | No. 144 (23 சூன் 2014) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | 2R (2014) |
| பிரெஞ்சு ஓப்பன் | 2R (2013) |
| விம்பிள்டன் | QF (2014) |
| அமெரிக்க ஓப்பன் | 1R (2013) |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 0–2 |
| பட்டங்கள் | 0 |
| அதியுயர் தரவரிசை | No. 474 (16 செப்டம்பர் 2013) |
| தற்போதைய தரவரிசை | No. 1211 (23 சூன் 2014) |
| பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | 1R (2013) |
| இற்றைப்படுத்தப்பட்டது: 23 சூன் 2014. | |
வாழ்க்கை வரலாறு
நிக்கலோசு இல்மி கீர்யோசு ஆஸ்திரேலியாவின் கான்பராவில் பிறந்தவர். இவரின் தந்தை, கீர்யோசு (ஜார்ஜ்) கிரேக்கராவார். தாய் நோர்லைலா, மலேசியப் பின்னணியைக் கொண்டவர்.[2][3] தந்தை கீர்யோசு வண்ணமடிக்கும் சுயத்தொழிலைக் கொண்டவர். தாய் கணினி பொறியியலாளர்.[4] மூன்றாவதும் கடைசியுமான இவருக்கு ஒரு அண்ணனும் அக்காளும் உண்டு; அண்ணன், கிறிசுடோசு, வக்கீலாகவும் அக்காள்,அலிமா, நடிகையாகவும் உள்ளனர்.[5] கீர்யோசு எட்டாவது வகுப்பு வரை ராட்போர்டு கல்லூரியில் படித்து 12ஆம் வகுப்பு படிப்பை 2012இல் தரமலான் கல்லூரியில் முடித்தார்.[6]
கூடைப் பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய கீர்யோசு தனது பதின்ம ஆண்டுகளில் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புல அணியிலும் ஆத்திரேலிய அணியிலும் விளையாடியுள்ளார். தமது 14வது அகவையில் டென்னிசில் மட்டுமே தமது கவனத்தைக் குவியப்படுத்த தீர்மானித்ததை அடுத்து கூடைப்பந்ந்தாட்டத்தை விட்டார்.[7] இரண்டு ஆண்டுகள் கழித்து ஆத்திரேலிய விளையாட்டு நிறுவனத்தின் முழைமையான கல்விக்கொடையைப் பெற்று டென்னிசு விளையாட்டில் சிறப்புப் பயிற்சி பெறலானார். ஐக்கிய அமெரிக்காவின் என்பிஏ ஆட்டங்களில் கீர்யோசு பாஸ்டன் செல்டிக்ஸ் அணியின் விசிறியாவார் .[8]
மேற்சான்றுகள்
- ↑ "Nick KYRGIOS". International Tennis Federation. Archived from the original on 2014-10-10. Retrieved 10 திசம்பர் 2012.
- ↑ LEO SCHLINK (1 July 2014). "Rod Laver says Nick Kyrgios can put pressure on Rafael Nadal at Wimbledon tonight". NEWS CORP AUSTRALIA. http://www.couriermail.com.au/sport/tennis/rod-laver-says-nick-kyrgios-can-put-pressure-on-rafael-nadal-at-wimbledon-tonight/story-fnii0pkt-1226973082150. பார்த்த நாள்: 2 July 2014. "Kyrgios’ manager John Morris: “Then you’ve got the mass audience he can potentially reach in Malaysia with his Mum (Norlaila) being half Malaysian and the entire Asian community.""
- ↑ Adam Harvey (Wed 2 Jul 2014). "Australian tennis hopeful Nick Kyrgios might be 'the one' but first he needs to play Rafael Nadal". ABC. http://www.abc.net.au/news/2014-07-01/nick-kyrgios-to-play-nadal-at-wimbledon/5564038. பார்த்த நாள்: 2 July 2014.
- ↑ JACQUELIN MAGNAY (JUNE 27, 2014). "Nick Kyrgios now feels the Grand Slam pressure". THE AUSTRALIAN. http://www.theaustralian.com.au/sport/tennis/nick-kyrgios-now-feels-the-grand-slam-pressure/story-fnbe6xeb-1226968834872. பார்த்த நாள்: 2 July 2014.
- ↑ http://www.atpworldtour.com/Tennis/Players/Ky/N/Nick-Kyrgios.aspx NICK KYRGIOS: atpworldtour.com
- ↑ Dutton, Chris (15 December 2012). "Kyrgios has sights on Open season". Canberra Times. http://www.canberratimes.com.au/sport/tennis/kyrgios-has-sights-on-open-season-20121214-2bfnl.html. பார்த்த நாள்: 15 December 2012.
- ↑ Pearce, Linda (25 January 2013). "Newly crowned No.1 reaps reward of choosing right court". Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/tennis/newly-crowned-no1-reaps-reward-of-choosing-right-court-20130124-2d9r9.html. பார்த்த நாள்: 25 January 2013.
- ↑ "Loving The Clay - nickkyrgios.org". Archived from the original on 2014-11-29. Retrieved 2014-07-05.