பசேனதி
பசேனதி (Pasenadi) (சமக்கிருதம்: Prasenajit) (கிமு 6-ஆம் நூற்றாண்டு), பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் உள்ள கோசல நாட்டு மன்னர் ஆவார். புத்தர் காலத்திய, இச்வாகு குல மன்னரான இவரது தலைநகரம் சிராவஸ்தி ஆகும். இவர் மன்னர் சஞ்சய மகாகோசாலரின் மகனாவார்.[2] மன்னர் பசேனதி புத்தரின் புகழ் பெற்ற உபாசகர் ஆவார். இவர் கோசலத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்காக பல விகாரைகள் நிறுவியவர். இவரது தலைநகரான சிராவஸ்தியில் அனாதபிண்டிகன் நிறுவிய ஜேதவனத்தில், புத்தர் அடிக்கடி தங்கி மக்களுக்கு அறங்களை எடுத்துக் கூறுவார்.
| பசேனதி | |
|---|---|
| கோசல மன்னர் | |
மன்னர் பசேனதி என்ற பிரசேனஜித், கௌதம புத்தரை வணங்கச் செல்லுதல் | |
| ஆட்சிக்காலம் | கிமு 6-ஆம் நூற்றாண்டு |
| ராணி | மகத இளவரசி மல்லிகா வாசவகத்தியா |
| குழந்தைகளின் பெயர்கள் | விருதாகன் வஜ்ஜிரா |
| அரசமரபு | இச்வாகு |
| தந்தை | சஞ்சய மகாகோசாலன் |

வாழ்க்கை
கோசல மன்னர் பசேனதி எனும் பிரஸ்னஜித் தக்சசீலாவில் படித்தவர். [3] இவரது முதல் மனைவி மகத நாட்டு இளவரசியாவர். [3]. இரண்டாம் மனைவி வாசவகத்தியா, மகாநாமாவின் வளர்ப்பு மகள் ஆவார். இரண்டாம் மனைவி வாசவகத்தியாவிற்கு விதூதபன் என்ற மகனும்; வஜ்ஜிரா என்ற மகளும் பிறந்தனர். வஜ்ஜிராவை, மகத இளவரசர் அஜாதசத்ருவுக்கு மணமுடித்தனர். [3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதாங்கள்
- Sastri, K. A. Nilakanta, ed. (1988) [1967], Age of the Nandas and Mauryas (Second ed.), தில்லி: Motilal Banarsidass, ISBN 81-208-0465-1
{{citation}}: Unknown parameter|editorlink=ignored (help) - Sen, Sailendra Nath (1999) [1988], Ancient Indian History and Civilization (Second ed.), New Age International Publishers, ISBN 81-224-1198-3