படிவப்பாறை நிலவியல் கூட்டகம்
படிவப்பாறை நிலவியல் கூட்டகம் (Society for Sedimentary Geology (SEPM)) என்ற கூட்டமைப்பு, அமெரிக்க மாநிலமான ஓக்லகோமாவை தளமாகக் கொண்ட, 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டப் பன்னாட்டு இலாப நோக்கற்ற, அறிவியல் குமுகாயம் ஆகும். இதனை சுருக்கமாக SEPM எனக் குறிப்பிடுவர்.[1] இவ்வமைப்பின் முந்தையப் பெயர், பொருளாதார புதைபடிவவியலாளர்கள் மற்றும் கனிமவியலாளர்களின் சங்கம் ('Society of Economic Paleontologists and Mineralogists) என்பதாகும்.
பாறைப்படிவியல், தொல்லுயிரியல், சுற்றுச்சூழலியல், ஆழ்கடல் நிலவியல், நீர்நிலவியல் ஆகியவற்றின் நுட்பமான அறிவியல் செய்திகளையும், இவைத் தொடர்புடையனவற்றையும் ஆய்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீடுகளை அளிக்கிறது. மேலும் இரண்டு முக்கிய ஆய்விதழ்களை ( Journal of Sedimentary Research (JSR[2]) and PALAIOS[3]) வெளியிடுகிறது. தனது உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் கட்டற்ற (open access magazine) வெளியீடுகளைத் தருகிறது. இத்துறைச்சார்ந்த அறிவியலாளர்களுக்கு, உயர்ந்த விருதுகளையும் அளிக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "SEPM Mission Statement & Values". SEPM. Retrieved 8 சனவரி 2026.
- ↑ "Article Highlight". geoscienceworld. Retrieved 8 சனவரி 2026.
- ↑ "Palaios". worldcat. Retrieved 8 சனவரி 2026.