பத்திரை
பத்திரை ( Bhadra) இந்து சமயத்தில், பத்திரை என்ற சொல் குபேரனின் மனைவியாகவும், சந்திரனின் மகளாகவும், கிருட்டிணனின் மனைவியாகவும் ( பத்திரை ), கிருட்டிணன் மற்றும் பலபத்ரனின் சகோதரியாகவும், ஒரு மலையாகவும், துர்க்கையின் துணையாகவும் ( அஷ்டநாயகிகளில் ஒருவர் ).[1] [2] [3] குறிப்பிடபடுகிறாள். கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்ற இவள் எண்மரில் ஏழாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[4]
குபேரனின் மனைவியாக
முரா என்ற அசுரனின் மகளான பத்திரை, யட்சி, சாவி, இரித்தி, மனோரமா, [5] நிதி, [6] சகாதேவி [7] மற்றும் குபேரி என்றும் குறிப்பிடப்படுகிறாள். இவளுக்கும் குபேரனுக்கும் நளகுவாரன், மணிபத்ரன், மயூரஜன் என்ற மூன்று மகன்களும், மீனாட்சி என்ற மகளும் இருந்தனர். இராவணன் படையெடுத்து, அன்றைய இலங்கையைக் கைப்பற்றிய பிறகு, இவள் தனது கணவருடன் அல்காபுரிக்குச் சென்றாள்.[8] [9] [10] [11]
சந்திரனின் மகளாக
மற்றொரு கணக்கில், பத்திரை சந்திரனின் மகளாகக் குறிப்பிடப்படுகிறார். இக்கதையில், உதத்தியன் என்ற முனிவரை மணந்தாள். முன்பு இவளைக் கண்டு ஆசைப்பட்ட வருணன், இவளை தந்தையின் ஆசிரமத்திலிருந்து கடத்திச் செல்கிறான். இவளைத் திரும்ப அழைத்து வரச் சென்ற அனுப்பப்பட்ட நாரதர் தோல்வியுடன் திரும்பினார். இதனால் மிகவும் கோபமடைந்த உதத்திய முனிவர், கடல் முழுவதையும் குடித்து விடுகிறார். ஆனாலும் வருணன் இவளை விடவில்லை. இதனால் வருண ஏரி வறண்டு, பெருங்கடல் மறைந்தது. மேலும் துறவி -- " சரஸ்வதி, பாலைவனங்களில் மறையட்டும், பாலைவனமான இந்த நிலம் தூய்மையற்றதாக மாறட்டும்" என சாபமிட்டார். நாடு வறண்டு போன பிறகு, வருணன் பத்திரையை திரும்ப அழைத்து வந்தான். முனிவர் அவளைத் திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் உலகத்தையும் வருணனையும் அவர்களின் துன்பங்களிலிருந்து விடுவித்தார்." [12]
கிருட்டிணனின் மனைவியாக
பாகவத புராணத்தின்படி கிருட்டிணனின் மனைவியராகச் சொல்லப்படும் (எண்மனையாட்டி அல்லது அஷ்டபார்யா) பத்திரை முக்கிய இராணியாக சொல்லப்படுகிறாள். விஷ்ணு புராணம் மற்றும் அரிவம்சம் இவளை 'திருஷ்டகேதுவின் மகள்' அல்லது 'கேகேய இளவரசி' என்று குறிப்பிடுகின்றன.[13][14] சுயம்வரம் மூலம் இவள் கண்ணனைத் தன் நாயகனாக வரித்துக் கொண்டாள்.[15]
இதனையும் காண்க
சான்றுகள்
- ↑ 1) Bangala Bhasar Abhidhaan ( Dictionary of the Bengali Language) Shishu Sahitya Samsad Pvt Ltd. 32A, APC Road, Kolakata – 700009, Volume 1, p.151. (ed. 1994)
- ↑ Manorama Year Book (Bengali edition)Malyala Manorama Pvt. Ltd., 32A, APC Road, Kolkata- 700 009(ed.2012), p.153
- ↑ "(12) Eight Companions of the Mother »". Archived from the original on 2012-11-07. Retrieved 2018-12-27.
- ↑ Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 62. ISBN 978-0-8426-0822-0.
- ↑ Brahmavaivarta Purana Brahma Khanda(Khanda I) Chapter 5 Verse 62, English translation by Shantilal Nagar Parimal Publications Link: https://archive.org/details/brahma-vaivarta-purana-all-four-kandas-english-translation
- ↑ Devdutt Pattanaik's 7 SECRETS OF THE GODDESS, Chapter 5. Lakshmi's Secret Page 180
- ↑ Padma Purana Srishti Khanda First Canto Chapter 5.Verse 15, English translation by Motilal Bansaridas Publications Book 1 Page 41, Link: https://archive.org/details/PadmaPuranaVol05BhumiAndPatalaKhandaPages15651937ENGMotilalBanarsidass1990_201901/Padma-Purana%20Vol-01%20-%20Srshti-Khanda%20-%20pages%201-423%20ENG%20Motilal%20Banarsidass%201988
- ↑ Daniélou, Alain (1964). "Kubera, the Lord of Riches". The myths and gods of India. Inner Traditions / Bear & Company. pp. 135–7.
- ↑ Wilkins, W. J. (1990). Hindu Mythology, Vedic and Puranic. Sacred texts archive. pp. 388–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-9308-4.
- ↑ Knapp, Stephen (2005). The Heart of Hinduism: The Eastern Path to Freedom, Empowerment and Illumination. iUniverse. pp. 192–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-595-79779-2.
- ↑ "Puranic encyclopaedia : A comprehensive dictionary with special reference to the epic and Puranic literature". 1975.
- ↑ Hinduism: An Alphabetical Guide.
- ↑ Prabhupada. "Bhagavata Purana 10.58.56". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2010-10-17. Retrieved 2015-09-01.
- ↑ Prabhupada. "Bhagavata Purana 9.24.38". Bhaktivedanta Book Trust. Archived from the original on 2009-09-18. Retrieved 2015-09-01.
- ↑ Aparna Chatterjee (December 10, 2007). "The Ashta-Bharyas". American Chronicle. Archived from the original on 6 டிசம்பர் 2012. Retrieved 21 April 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)