பத்ம வாகனம்
பத்ம வாகனம்
பத்ம வாகனம்
உரிய கடவுள்: அம்பிகை, அம்மன்

பத்ம வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.

பத்ம வாகன சிறப்பு

பத்மம் என்றால் தாமரை என்று பொருளாகும். தாமரை மலர் சேற்றில் இருந்தும் மலர்வதால் புராண, இதிகாசங்களில் தாமரை மலரை சிறப்பு மிக்க ஒன்றாக கருதுகிறார்கள்.

பத்ம வாகன அமைப்பு

ஐந்து தலை நாகத்தின் சுற்றப்பட்ட உடலின் மேல் தாமரை மலர் விரிந்த நிலையில் உள்ளது. இந்த விரிந்த நிலையில் உள்ள தாமரை மீது அம்மன் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெறும். ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல தோன்றும்.[1]

இவற்றையும் காண்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேற்கோள்கள்

  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 59 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://tamilar.wiki/w/index.php?title=பத்ம_வாகனம்&oldid=425784" இலிருந்து மீள்விக்கப்பட்டது