பன்சிபூர்
பன்சிபூர் (Banshipur) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் போச்பூர் மாவட்டத்தில் உள்ள சாப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தக் கிராமத்தில் மொத்தம் 154 குடும்பங்கள் வசித்தன. அரசுப் பதிவுகளின்படி, பன்சிபூர் கிராமத்தின் மக்கள் தொகை 1220 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 649 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 571 ஆகவும் இருந்தது.
பன்சிபூர் Banshipur பந்த்வான் | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 25°40′13″N 84°21′05″E / 25.670178°N 84.351392°E[1] | |
| நாடு | |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | போச்பூர் (அர்ரா) |
| வட்டாரம் | தராரி |
| பஞ்சாயத்து | பசூரி |
| மொழிகள் | |
| • அலுவல் | மைதிலி மொழி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-பி ஆர் |
| வாகனப் பதிவு | பி.ஆர்-03 |
பன்சிபூர் கிராமத்தில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 185 ஆக இருந்தது. இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 15% ஆகும். பன்சிபூர் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 880 ஆகும். இது பீகார் மாநிலத்தின் சராசரியான 918-என்பதைவிட குறைவாகும்.[3]
பன்சிபூர் கிராமத்தில் பல சமூகங்கள் வாழ்கின்றன. பிராமணர்கள் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர். மற்ற சாதிகளில் யாதவா, பனியா மற்றும் துசாத்து ஆகியோர் உள்ளனர். அருகிலுள்ள சந்தை, பேருந்து நிலையம், வங்கிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவை கர்ணமேபூர் பசாரில் சுமார் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இங்கு ஒரே ஒரு தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது.
நிர்வாகம்
பன்சிபூர் கிராமம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பஞ்சாயத்து இராச்சியத்தின் சட்டப்படி கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கிராமப் பிரதானால் கிராம பஞ்சாயத்து மூலம் பன்சிபூர் கிராமம் நிர்வகிக்கப்படுகிறது.
| விவரம் | மொத்தம் | ஆண் | பெண் |
|---|---|---|---|
| வீடுகள் எண்ணிக்கை | 154 | ||
| மக்கள் தொகை | 1220 | 648 | 571 |
மேற்கோள்கள்
- ↑ "Banshipur map". google.co.in. Retrieved 2017-07-24.
- ↑ "Pincode of Banshipur". getpincode.info. Retrieved 2017-07-24.
- ↑ "Bansipur Village Population, Caste - Shahpur Bhojpur, Bihar - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-01-05.