பவானி (நெல்)
பவானி (Bhavani) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மற்றும் மத்தியகால நெல் வகையாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பேட்டா மற்றும் பி பி ஐ - 76 (Peta x BPI 76) ஆகிய நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நடுத்தர நீர்ப்பாசன வசதிபெற்ற நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்து காணப்படுகிறது. அரை உயர பயிராகவும், மற்றும் புகையான் நோய்க்கு மிதமாக பாதிக்கப்படும் இது, தென் இந்திய பகுதியான தமிழகத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[1] சராசரியாக ஒரு எக்டேருக்கு சுமார் 5,000 கிலோ மகசூல் தரக்கூடிய இந்நெல் இரகத்தின் அரிசி, நீண்ட மற்றும் மெல்லிய வெள்ளை நிறம் கொண்டதாகும்.[2]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ "Details of Rice Varieties: Page 1 - 45. Bhavani (CO-63)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-04-17.
- ↑ "Paddy Varieties of Tamil Nadu - Ruling Varieties - Medium Duration - Bhavani". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-27.