பாபட்லா - 1235
பாபட்லா - 1235 (BPT 1235), எனப்படும் இந்த நெல் வகை, சபர்மதி மற்றும் W12708 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, தானிய லட்சுமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
| பாபட்லா - 1235 BPT 1235 |
|---|
| வேளாண் பெயர் |
| தானிய லட்சுமி |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| சபர்மதி X W12708 |
| வகை |
| கலப்பின நெல் வகை |
| காலம் |
| 120 - 125 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6500 - 7000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1982 |
| வெளியீட்டு நிறுவனம் |
| CVRC / SVRC, பாபட்லா[2] |
| மாநிலம் |
| ஆந்திரப் பிரதேசம் |
| நாடு |
காலம்
குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 120 - 125 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. குறுவை சாகுபடி பருவங்களில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, வறட்சியை தாங்கி வளரரும் இயல்பு கொண்டதாக கருதப்படுகிறது.[1]
மகசூல்
பித்தப்பை பூச்சி, தண்டு துளைப்பான் போன்ற நோய்கள் தாக்குதல்களை தாங்கும் பாபட்லா - 1235, ஒரு எக்டேருக்கு சுமார் 6,500 முதல், 7000 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. [1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Dhanya Lakshmi (BPT 1235)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-08-12.
- ↑ Paddy varieties released from Agricultural Research Station, Bapatla