பாபட்லா - 1768
பாபட்லா - 1768 (BPT 1768), எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 3301 (BPT 3301) மற்றும் மசூரி விகாரி (Mahsuri mutant) ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பாபட்லா சன்னலு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
| பாபட்லா - 1768 BPT 1768 |
|---|
| வேளாண் பெயர் |
| பாபட்லா சன்னலு |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| சொர்ணமசூரி X ARC 6650 |
| வகை |
| கலப்பின நெல் வகை |
| காலம் |
| 155 - 160 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6000 - 6500 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2002[2] |
| வெளியீட்டு நிறுவனம் |
| CVRC / SVRC, பாபட்லா[3] |
| மாநிலம் |
| ஆந்திரப் பிரதேசம் |
| நாடு |
காலம்
நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 155 - 160 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா சாகுபடி பருவத்தில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, சம்பாப் பருவத்தில் ஆந்திர மாநில கிருஷ்ணா ஆற்றின் மேற்கு கழிமுகப் பகுதிகள் மற்றும் தெலுங்கானா மாநில நாகார்ஜுன சாகர் அணைப் பகுதிகள் போன்ற ஈரத்தன்மையுள்ள நிலங்களில் பெருமளவு பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[1]
மகசூல்
பாக்டீரியா இலை கருகல் நோய், மற்றும் சாருறுஞ்சும் பூச்சிகளுக்கு வெகுவான எதிர்ப்புத்திறன் கொண்ட பாபட்லா - 1768, ஒரு எக்டேருக்கு சுமார் 6,000 முதல், 6500 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் மழை மற்றும் மிதமான வெள்ளப்பெருக்கு காலத்தில் முழுமையாக நிலைத்து நிற்கும் தன்மை கொண்ட இதன் நெற்பயிர்கள், 7 நாட்கள் வரை நீரில் மூழ்கும் நிலையிலும் தாங்கும் திறன் உடையதாகவும், உறையாத மற்றும் சிதறாத, நடுத்தர மெல்லிய தானியத்தை கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Bapatla Sannalu (BPT 1768)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-15.
- ↑ - icar-iirr.org - Varieties released from RRU Bapatla
- ↑ Paddy varieties released from Agricultural Research Station, Bapatla