பாம்பன் தீவு (Pamban Island) என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுற்றுலா மற்றும் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ள இராமேசுவரம் இத்தீவின் முக்கிய நகரம் ஆகும்.

பாம்பன் தீவு
படிமம்:Panorama of Bay of Bengal near Pamban Bridge.jpg
பாம்பன் தீவு
புவியியல்
ஆள்கூறுகள்9°15′N 79°18′E / 9.25°N 79.3°E / 9.25; 79.3
பரப்பளவு96 km2 (37 sq mi)
நீளம்17.70 km (10.998 mi)
அகலம்9.65 km (5.996 mi)
கரையோரம்37 km (23 mi)
உயர்ந்த ஏற்றம்10 m (30 ft)
நிர்வாகம்
இந்தியா
மக்கள்
மக்கள்தொகை82,682
படிமம்:PambanIsland1955.jpg
பாம்பன் தீவின் வரைபடம் (1955)

புவியியல்

பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து தனுஷ்கோடியின் தென்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் தனுஷ்கோடி முதல் இராமேசுவரம் வரை 2 கி.மீ. முதல் 7 கி.மீ. வரை பரந்துள்ளது.

பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, பாம்பன், இராமேசுவரம் என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன[1]. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: பாம்பன், இராமேசுவரம் என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் தொடருந்து நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட தங்கச்சிமடம், இராமர்பாதம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் இராமேசுவரத்தில் உள்ளது. இராமேசுவரம் பாம்பன் நகரில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும், தனுஷ்கோடியில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. ."Detailed map of Rameswaram taluka". Archived from the original on 2015-04-02. Retrieved 2008-12-25.
"https://tamilar.wiki/w/index.php?title=பாம்பன்_தீவு&oldid=434050" இலிருந்து மீள்விக்கப்பட்டது