பாலி நடனம் (ஆங்கிலம்: Balinese Dance; இந்தோனேசியம்: Tarian Bali; பாலியம்: Igélan Bali) என்பது இந்தோனேசியா, பாலி தீவில், பாலி மக்களின் தனித்துவம் வாய்ந்த நடனக்கலை; மற்றும் பாலி மக்களிடையே சமயம் மற்றும் கலை வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக நிலைத்து நிற்கும் ஒரு பண்டைய நடன மரபாகும்.[1]

படிமம்:17 Years of Sekar Jepun 2014-11-01 03.jpg
லெகாங் பாபாங் சபா நடனம்
பாலி நடனத்தின் மூன்று வகைகள்
நாடுஇந்தோனேசியா
மேற்கோள்00
இடம்ஆசிய பசிபிக்
கல்வெட்டு வரலாறு
கல்வெட்டு2015 (10-ஆவது அமர்வு)
பட்டியல்பிரதிநிதி

பாலி நடனம் துடிப்பானது, வளைவுச் சாயல் கொண்டது; மற்றும் தீவிரமான அசைவுகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.[2] பாலி நடனக் கலைஞர்கள் தங்களின் விரல்கள், கைகள், தலை, கண்கள் போன்ற உறுப்புகளைக் கொண்டு உடல் சைகைகளின் வழியாக நடன நாடகக் கதைகளை வெளிப்படுத்துகிறார்கள்.[1]

பாலி நடனத்தின் வடிவங்களிலும் மற்றும் நடன பாணிகளிலும் பெரும் செழுமைக் கூறு ஆழமாய்ப் பதிந்துள்ளதைக் கண்டறிய முடியும்; குறிப்பாக சடங்குகள் தொடர்பான நடன நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. பாலியின் பெரும்பாலான நடனங்கள் இந்து அல்லது பாரம்பரிய நாட்டுப்புற சடங்குகளுடன் தொடர்புடையவை. சடங்குகள் தொடர்பான நடன நிகழ்ச்சியின் போது, நடனக் கலைஞர்களை தன்னிலை இழந்த ஒரு மயக்க நிலையில் நடனம் ஆடுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.[3]

15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜாவாவில் இசுலாமிய மயமாக்கல் தொடங்கிய போது, இந்து சமயத்தைச் சார்ந்த கலைஞர்கள் ஜாவாவிலிருந்து தப்பித்து பாலியில் தஞ்சம் அடைந்தனர். அந்தக் கட்டத்தில் இருந்து பாலியின் கலை கலாச்சாரமும் மாறத் தொடங்கியது; பாலி மக்களின் பண்பாடும்; மற்றும் ஜாவா இந்துக்களின் பண்பாட்டு நம்பிக்கைகளும் நடனம் மூலமாக ஒன்றிணைந்தன.[4]

பொது

படிமம்:Balinese Dancers.JPG
பாலி நடனமணிகள்
படிமம்:Ramayana Bali Ubud 1.jpg
பாலி உபுட் நகரில் இராமயண நடனம்

சடங்குகள் தொடர்பான நடன நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, பிற பாலி நடனங்கள் சமயச் சடங்குகளுடன் இணைக்கப்படவில்லை. பாரிஸ் நடனம் (Baris) அல்லது பெண்டெட் (Pendet) வரவேற்பு நடனங்கள்; மற்றும் பொழுதுபோக்குக்கான சமூக நடனமான ஜோகெட் (Joged) நடனம் போன்றவை சில நிகழ்ச்சிகள் அல்லது கொண்டாட்ட நோக்கங்களுக்காக தோன்றிய நடன வகைகள் ஆகும்.[1][3]

பாலினிய நடனங்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், இந்து சமயத்துடன் வலுவான தொடர்பைக் கொண்ட ஒரு துடிப்பான கலை வடிவமாகும். பாலி நடனம் என்பது பாலி பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் தெய்வங்களுடன் இணைவதற்கான ஒரு வழியாகவும்; வருகை தரும் தெய்வங்களுக்கான வரவேற்பு அல்லது ஒரு தொடர்பு அலைவரிசையாகவும் செயல்படுகிறது.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பிரசாதத்துடன் தொடங்கும். மேலும் நடனக் கலைஞர்கள் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் தக்சு (Taksu) எனும் தெய்வீக உத்வேகத்தைப் பெற பிரார்த்தனை செய்வார்கள். இந்த நடனங்கள் வாராந்திர அடிப்படையில் கோயில் திருவிழாக்களில் பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம்; மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சில இடங்களில் நடைபெறுகின்றன.[1][5]

இந்து சமயத்தில் நடனம்

இந்து சமயத்தில் நடனம் என்பது உலகின் நிரந்தரமான ஈர்ப்பு மற்றும் சீர்திருத்தத்திற்கு துணையாக உள்ளது. படைப்பு மற்றும் இனப்பெருக்க சமநிலை பெரும்பாலும் சிவனின் மனைவி துர்காவாக உருவகப் படுத்தப்படுகிறது.

சில சமயங்களில் துர்கா தெய்வம்; உமா, பார்வதி அல்லது காளி என்றும் அழைக்கப்படுகிறது. ரங்தா (Rangda) எனும் பாலினிய தெய்வத்தின் உருவம், துர்காவைப் போலவே இருப்பதால் பாலினிய இந்து சமயத்தில் அந்தத் தெய்வம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.[6]

பாலி நடனக்கலை

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Balinese Dances & Traditional Performances are a dynamic form of art with a strong connection to religion. It is an important part of Balinese culture and serves as a means of connecting with the gods". Bali.com. Retrieved 11 March 2025.
  2. Lieberman, Fredric. "Relationships of Musical and Cultural Contrasts in Java and Bali". University of California Santa Cruz. Retrieved March 9, 2013.
  3. 3.0 3.1 "Nadi Trance in the Balinese- Trance — called kerahuan in Balinese, which means 'a state of being entered' — is thought to be the influx of another energy into a person's body, which takes over control of the body and causes a change (or loss) of consciousness. K". Komaneka Fine Art Gallery. 7 December 2021. Retrieved 11 March 2025.
  4. "In the early 15th century the art culture of Bali changed when artists fled from Java. At this time cultural beliefs of the Balinese and Hindu came together through dance". www.balispirit.com. Retrieved 11 March 2025.
  5. "Balinese traditional dances are beautiful and unique. Usually, those dances are closely connected to religious rituals". Authentic Indonesia. Retrieved 11 March 2025.
  6. Bali: Sekala and Niskala :Essays on Religion, Ritual, and Art (Bali--Sekala & Niskala) by Fred B., Jr. Eiseman (1989) p. 24

மேலும் படிக்க

  • Ketut Gobyah; Jro Mangku I Ketut Riana (2018). "Pura Ulun Danu Batur". Babad Bali. Yayasan Bali Galang. Archived from the original on November 22, 2017. Retrieved April 29, 2018.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாலி_நடனம்&oldid=432412" இலிருந்து மீள்விக்கப்பட்டது