பாவல்
பாவல் (Bawal), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டத்தில் அமைந்த பெரிய தொழில் நகரம் ஆகும். மேலும் இந்நகரம் தில்லி தேசியத் தலைநகர் வலையத்தில் உள்ளது.[1] தேசிய நெடுஞ்சாலை எண் 48, அமைந்த பாவல் நகரம், மாவட்டத் தலைமையிட நகரமான ரேவாரிக்கு 11 கிலோமீட்டர் தொலைவிலும்; புது தில்லிக்கு தென்மேற்கே 89.2கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
பாவல் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 28°05′N 76°35′E / 28.08°N 76.58°E | |
| நாடு | |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | ரேவாரி மாவட்டம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 332 km2 (128 sq mi) |
| ஏற்றம் | 266 m (873 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 16,776 |
| • அடர்த்தி | 51/km2 (130/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 123501 |
| தொலைபேசி குறியீடு | 01284 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
| வாகனப் பதிவு | HR 81 |
| இணையதளம் | haryana |
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாவல் நகரத்தின் மக்கள் தொகை 16,776 ஆகும். அதில் ஆண்கள் 8,828 மற்றும் பெண்கள் 7,948 ஆக உள்ளனர்.[2]
தொழிற்பேட்டை நகரம்
அரியானா மாநில தொழில்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் பாவல் நகரத்தில் 1995ஆம் ஆண்டில் பெரிய அளவில் தொழிற்பேட்டை நிறுவப்பட்டது.[3]2016ல் பாவல் தொழிற்பேட்டை நகரத்த்தில் US$4.18 பில்லியன் டாலர் அளவிற்கு தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து
அல்வார்-ரேவாரி இருப்புப் பாதையில் பாவல் தொடருந்து நிலையம் உள்ளது. புது தில்லி-ஜெய்ப்பூர், அகமதாபாத், வடோதரா, சூரத், மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 பாவல் நகரம் வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "NCR>>coverage". Archived from the original on 21 செப்டெம்பர் 2011. Retrieved 24 செப்டெம்பர் 2011.
- ↑ "Census India". censusindia.gov.in. 23 September 2022.
- ↑ "Dubai-based company keen on investing in state". tribuneindia.com. 6 December 2017. Archived from the original on 6 December 2017. Retrieved 7 December 2017.