பாஸ்தா
பாஸ்தா இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை மற்றும் சமையல் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை குவான் சாக்-ஜாங என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் கோங் ஹ்யோ-ஜின், லீ சன்-க்யூன், லீ ஹா-நுய் மற்றும் அலெக்ஸ் சூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
| பாஸ்தா | |
|---|---|
| வகை | காதல் நகைச்சுவை சமையல் |
| இயக்கம் | குவான் சாக்-ஜாங் |
| நடிப்பு | கோங் ஹ்யோ-ஜின் லீ சன்-க்யூன் லீ ஹா-நுய் அலெக்ஸ் சூ |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரிய மொழி |
| அத்தியாயங்கள் | 20 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | கொரியா |
| ஓட்டம் | 60 நிமிடங்கள் திங்கள் மற்றும் செவ்வாய் 21:55 (கொரியா நேரப்படி) |
| ஒளிபரப்பு | |
| ஒளிபரப்பான காலம் | 4 சனவரி 2010 – 9 மார்ச்சு 2010 |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
இந்த தொடர் ஜனவரி 4, 2010ஆம் ஆண்டு முதல் மார்ச் 9, 2010ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.
தமிழில்
இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 20 நவம்பர் 2014ஆம் ஆண்டு முதல் 2 ஜனவரி 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.