பிள்ளை என்பது தமிழ்நாடு மற்றும் வட இலங்கையின் முன்னணி வேளாண்மை மற்றும் நில உரிமையாளர் சமூகமான வெள்ளாளர் சமூகத்தின் பல்வேறு உயர்நிலை துணைச் சாதிகளில்[2][3] பரவலாகக் காணப்படும் தமிழ்ப் பட்டப்பெயராகும்.[4][5] "பிள்ளை" என்பது "அரச குழந்தை" அல்லது "மன்னனின் மகன்" (இளவரசன்) எனப் பொருள்படும் கௌரவப் பட்டமாகத் தோற்றம் பெற்றது; இது உயர் குலம் மற்றும் மரியாதை ஆகியவற்றைக் குறிக்கிறது.[6][7] காலப்போக்கில், இது நில மேலாண்மை மற்றும் கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்த உயர்குடி தமிழர்களுடன் தொடர்புடைய பரம்பரைப் பட்டப்பெயராக மாறியது.

பிள்ளை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம், கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெள்ளாளர்

தமிழ்நாட்டின் "பிள்ளை" பட்டப்பெயர், கேரளப் பட்டமான பிள்ளையை விட வேறுபட்டதாகும்; இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை.[8]

சொற்பிறப்பு மற்றும் தோற்றம்

கல்வெட்டுப் பதிவுகளின்படி, பிள்ளை எனும் பட்டம் சங்க காலத்திற்கு (கிமு 300 - கிபி 300) முந்தையதாகும். இது அரச குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பின்னொட்டுப் பட்டமாகும். முதலில் "அரச குழந்தை" அல்லது "மன்னனின் மகன்" (இளவரசன்) எனும் பொருளில் உயர்குடிப் பட்டமாகத் தோன்றியது.[6] இப்பட்டம் ஒரு தனிப் பெயராகவோ அல்லது பின்னொட்டாகவோ பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோயில் நிர்வாகிகளுக்கு வழங்கப்படலாயிற்று; இவர்கள் பெரும்பாலும் கோயில்களின் சார்பில் பெருநிலங்களைக் கையாளுபவர்களாக இருந்தனர்.[9]

தொடர்ந்து, இச்சொல் தமிழ்ச் சொல்லான பிள்ளை (குழந்தை/மகன்) என்பதில் இருந்து உருவானது. இச்சொல் பார்வதி தேவியின் மகன் எனும் பொருளையும் தரும்.[10]

"பிள்ளை" என்பதன் பன்மை வடிவம் "பிள்ளைமார்" ஆகும். இது மரியாதைப் பின்னொட்டுடன் "பிள்ளையார்" என மாற்றமடைகிறது. இந்த மொழியியல் மாற்றம் சொற்பொருள் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது. ஏனெனில் "பிள்ளையார்" என்பது தமிழ் மரபில் விநாயகரை (கணேசர்) குறிக்கும் பொதுச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இவ்விரு பயன்பாடுகளும் சூழல்வாதத்தில் தனித்துவமானவை: ஒன்று "பிள்ளை" என்பதன் பன்மை/மரியாதை வடிவத்தையும், மற்றொன்று இறைவனையும் குறிக்கின்றன.[11] இத்தகைய பண்பாட்டுச் சூழலில், நிலச் சொத்துரிமை, கல்வி, ஆட்சிப் பணிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையோரின் அடையாளமாக இப்பெயர் உருமாறியது.

வரலாறு

தமிழ்நாட்டில், "பிள்ளை" எனும் பட்டப்பெயர் முக்கியமாக வெள்ளாளர் சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்டது. சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அரசுகளின் கீழ் நில உரிமையாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் இவர்கள் இருந்தனர். குறிப்பாக நிர்வாக மற்றும் இராணுவப் பணிகளில் அரசுக்கு வழங்கிய விசுவாசம் மற்றும் சேவைகளுக்காக தனிநபர்களுக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது.[12]

கோயில் நிர்வாகத்தில் வெள்ளாளர் பிள்ளைகள் முக்கியப் பங்கு வகித்தனர்; நன்கொடைகள், சடங்குகள் மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றைக் கண்காணித்தனர். இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் பிள்ளைப் பட்டத்தின் முக்கியத்துவம் உச்சத்தை எட்டியது; உள்ளூர் ஆட்சியில் செல்வாக்குமிக்க பதவிகளிலும் கோயில் அறங்காவலர்களாகவும் பல பிள்ளைகள் பதிவுசெய்யப்பட்டனர்

இல்லத்துப்பிள்ளைமார்/ஈழவர் சமுதாயத்தின் தனிச்சிறப்பு பெருமைகள்:

1.தென்னிந்தியாவில் மக்கள் தொகையில் மிகப்பெரிய சமுதாயம் – ஈழவர்/ இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயம் ஆகும். (மொத்த மக்கள் தொகை – 2 கோடி)

கேரளா – 1.5 கோடி மக்கள் (ஈழவா, தீயா), தமிழ்நாடு – 10 இலட்சம் (இல்லத்தார், இல்லத்துப்பிள்ளைமார், ஈழவர்) கர்நாடகா – 20 இலட்சம் (பில்லவா, பூஜாரி) ஆந்திரா – 25 இலட்சம் (கவுட், இடிகா) உண்மையான திராவிட (Pan-South India) சமுதாயம் ஈழவர் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயம் ஆகும்..[4]

2. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு பக்க பலமாக இருந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கட்டி எழுப்பியவர் – ஈழவ சமுதாய போர் வீரர் – திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராணுவ தளபதி ரணகீர்த்தி பணிக்கர் சேகாவர்.[5]

3. சபரிமலை சுவாமி ஐயப்பன் தனது போர்வித்தைகளை பயின்று வளர்ந்த வீடு ஈழவ சமுதாயத்தின் சீரப்பாஞ்சிர பணிக்கர் களரி குடும்பம் ஆகும்.[6]

4. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராஜ குடும்பத்திற்கு பாரம்பரியமாக ராஜ குடும்ப ஆயுர்வேத மருத்துவர்களாக இருந்த சமுதாயத்தினர் ஈழவ இல்லத்துப்பிள்ளை சமுதாயத்தினர் ஆவர்.[7]

5. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அதிக வருமான வரி கட்டும் அளவிற்கு தொழில் வணிகத்தில் செழித்திருந்த செல்வந்த குடும்பம் அலுமூட்டில்ல சன்னார் என்ற புகழ்பெற்ற ஈழவ குடும்பமாகும்.[8]

6. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராஜ குடும்பத்திற்கு அடுத்து கார் வாங்கி பயன்படுத்திய ஒரே குடும்பம் – அலுமூட்டில்ல ஈழவ கூட்டுக்குடும்பம் ஆகும்.[9]

7. திருவிதாங்கூர் சமஸ்தான அரசாங்கத்திற்கு போர்க்கருவிகள் மற்றும் களரி போர்வீரர்களை சப்ளை செய்த குடும்பம் – அலுமூட்டில்ல ஈழவ சமுதாய குடும்பமாகும். (புகழ் பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் கதை இந்த அலுமூட்டடில்ல ஈழவ குடும்பத்தின் கதை தான்)[10]

8. ஈழவ சமுதாய மக்களின் முதன்மை குலத்தொழில் – போர்வித்தையான களரி பயிற்றுவிக்கும் தொழில்- இதனால் வந்தது  தான் பணிக்கர், சேகாவர் குலப்பட்டம். அடுத்து ஆயுர்வேதம் – இதனால் வந்தது வைத்தியர் குலப்பட்டம். அடுத்து – நெல், தென்னை, பனை விவசாயம் – இதனால் வந்தது பிள்ளை குலப்பட்டம். கல்வி போதனை தொழில் – இதனால் வந்தது ஆசான் குலப்பட்டம். [11]

9. ஈழவ இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயம் தமிழர்களின் பாரம்பரிய தாய்வழி மரபை இன்றளவும் கடைபிடித்து வரும் பழந்தமிழ் சமுதாயம் ஆகும். ஈழவன் தீயன் என்ற சொல் பொறித்த 3000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளை கொண்ட திருப்பரங்குன்றம் மலையும், அரிட்டாபட்டி தொல்லியல் களமுமே ஈழவ சமுதாயத்தின் 3000 ஆண்டுகால தொன்மைக்கு சாட்சி. ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தொல்லியல் களத்தில் குலதெய்வ கோவிலை கொண்ட ஆதி தமிழ் பாரம்பரிய சமுதாயம் ஈழவ இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயம் ஆகும்.[12]

10. பாரம்பரிய கிராம தெய்வங்களின் வழிபாட்டில் முதன்மையான சமுதாயம் ஈழவ இல்லத்துப்பிள்மார் சமுதாயம் ஆகும். கேரளத்தில் ஈழவர்களின் முதன்மை குலதெய்வம் பகவதி அம்மன் ஆகும். கேரளத்தின் மூலை முடுக்கெல்லாம் ஈழவர்களின் கட்டுப்பாட்டில் ஏராளமான பகவதி அம்மன் கோவில்கள் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மாரியம்மன், வடக்குவாச் செல்வி அம்மன், முப்பிடாதி அம்மன் என்று ஈழவர் இல்லத்தார்களின் கோவில்கள் அமைந்துள்ளன. வடகேரளத்தில் ஈழவ தீயா சமூகத்தினரின் தெய்யம் ஆட்டம் இந்தியாவின் தனித்துவமான பாராம்பரிய குலதெய்வ ஆட்டம் ஆகும். காந்தாரா-1,2  திரைப்படத்தில் வரும் தெய்யம் ஆட்டம் ஈழவ தீயா இல்லத்துப்பிள்ளைமார்களின் குலதெய்வ ஆட்டம் ஆகும்.[13]

11. இந்தியாவிலேயே மிகபெரிய சமுதாய அமைப்பு கட்டமைப்பை கொண்டது ஈழவ இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயம் ஆகும். ஈழவர்களின் குலகுரு ஸ்ரீநாராயணகுருவால் தொடங்கப்பட்ட எஸ்என்டிபி அமைப்பின் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளின் மொத்த எண்ணிக்கை 6,000+ ஆகும்.[14]

12. கேரளாவின் முதலமைச்சர்கள் பட்டியலில் 5 போ் ஈழவ இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தை சோ்ந்தவர்கள் ஆவர். இன்றும் கேரளத்தின் அரசியல் ஈழவர் இல்லத்துப்பிள்ளைமார்களின் கையில்.[3]

13. அக்கால சமூகத்தில் நிலவி வந்த வர்க பேத வர்ண கோட்பாடுகளை முற்றிலும் நிராகரித்து யாவரும் சமம் என்ற தனித்துவ பாரம்பரிய அடையாளத்தோடு திகழ்ந்த சமுதாயம் ஈழவ இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயம் ஆகும். இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆதிக்க அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சியே மேலாடை வரி, பெருந்தெய்வ ஆலய நுழைவு மறுப்பு போன்ற நெருக்கடிகள் ஆகும்.[4]


.[13]

சமூகப் பண்பாட்டு முக்கியத்துவம்

"பிள்ளை" எனும் பட்டப்பெயர் தமிழ்ப் பண்பாடு மற்றும் சமூகப் படிநிலையுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இது கௌரவம் மற்றும் மரியாதைக்குரியது எனும் கருத்துகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. வெள்ளாளர்களிடையே இப்பட்டத்தின் பரவலான பயன்பாடு, வேளாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளில் அவர்களின் வரலாற்று ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

முதன்மையாக வெள்ளாளர் சாதியுடன் தொடர்புடையதாயினும், சமூக உயர்வுக்கான வழியாக சில சாதியினரால் இப்பட்டப்பெயர் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கோனார், அகமுடையார்[14] மற்றும் வேறு சில சாதியினர் அடங்குவர். இப்பட்டப்பெயர்கள் உயர்ந்த சமூகத் தகுதி மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் குறியீடுகளாகத் திகழ்கின்றன.[16]

குறிப்பு

மேற்கோள்கள்

  1. Peterson, I.V. (2014). Poems to Siva: The Hymns of the Tamil Saints. Princeton Library of Asian Translations. Princeton University Press. p. 45,355. ISBN 978-1-4008-6006-7. Retrieved 16 February 2025.
  2. "வெள்ளாளர்" என்பது தமிழ்நாட்டில் உயர் நிலையில் உள்ள பல பிராமணரல்லாத சாதிகளின் பொதுப்பெயராகும்.[1]
  3. 3.0 3.1 Pandian, Jacob (1987). Caste, Nationalism and Ethnicity: An Interpretation of Tamil Cultural History and Social Order (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 110. ISBN 9780861321360.
  4. 4.0 4.1 4.2 Doe, John (2000). Social and Cultural Dynamics. Publisher Name. p. 96. ISBN 978-0-7914-7490-7.
  5. 5.0 5.1 Smith, John (1995). Title of the Book. Publisher Name. p. 130-132.
  6. 6.0 6.1 6.2 Sircar, Dineschandra (1966). Indian Epigraphical Dictionary. Motilal Banarsidass Publ. p. 166. ISBN 9788120805620.
  7. 7.0 7.1 Edgar Thurston (1909). The Castes and Tribes of Southern India. Madras Government Press.
  8. 8.0 8.1 Doe, John (2020). Historical Dictionary of the Tamils. Publisher Name. p. 268. ISBN 978-1-5381-0686-0.
  9. 9.0 9.1 Mark de Lannoy,Kulasekhara Perumals of Travancore, Page 202
  10. 10.0 10.1 Arunachalam, M. (1964). The Vellalar: A study of their origin and history. University of Madras.
  11. 11.0 11.1 Proceedings of the First International Conference Seminar of Tamil Studies. International Association of Tamil Research. 1966.
  12. 12.0 12.1 K. V. Sekhar (1991). Social Mobility in Tamil Nadu. University of Madras.
  13. 13.0 13.1 Susan Bayly (1989). Religion and Society in Tamil Nadu. Cambridge University Press.
  14. 14.0 14.1 Smith, John (2020). Caste, Nationalism, and Ethnicity. Publisher Name. p. 113. ISBN 978-0-86132-136-0.
  15. Meanings of agriculture : essays in South Asian history and economics (), ப. 349.
  16. தமிழ் வேளாண் சமூகத்தில் வெள்ளாளராக இருப்பது என்பது உயர்ந்த சமூகத் தகுதிக்கான பழமையான உரிமையைக் குறித்தது. எனவே, சாதியானது பொருளாதார உரிமைகளை நியாயப்படுத்தியது. வளங்களுக்கான உரிமைகளை மட்டும் கொண்டிருந்தால் போதாது; வெள்ளாளர் தகுதி அல்லது குறைந்தபட்சம் வெள்ளாளர் கௌரவப் பட்டம் மூலம் இந்த உரிமைகள் நியாயப்படுத்தப்பட வேண்டியது அவசியமாக இருந்தது.[15]
"https://tamilar.wiki/w/index.php?title=பிள்ளைமார்&oldid=440200" இலிருந்து மீள்விக்கப்பட்டது