புதியம்புத்தூர்
புதியம்புத்தூர் (Puthiamputhur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
புதியம்புத்தூர் பொது அமத்தூர் | |
|---|---|
பேரூராட்சி | |
| அடைபெயர்(கள்): ஆயத்த ஆடை நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| அரசு | |
| • வகை | ஊராட்சி |
| • நிர்வாகம் | ஒட்டபிடாரம் வட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 8,012[1] |
| Languages | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| Telephone code | 91- 461 |
| வாகனப் பதிவு | TN 69 |
| இணையதளம் | http://www.puthiamputhur.com/ |
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[2]
புதியம்புத்தூர் ஒரு சிறிய நகரம். இது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தூத்துக்குடியிலிருந்து 17 கி, மீ. தொலைவிலும் ஓட்டப்பிடாரத்திலிருந்து தெற்கே 4 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து வடக்கே 15 கி,மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. புதியம்புத்தூர் தென்னகத்தின் திருப்பூர் என்றும் ஆயத்த நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
வழிபாட்டுத் தளங்கள்
- பத்ரகாளியம்மன் கோவில்
- கத்தோலிக்க திருச்சபை தேவாலயம்
மேற்கோள்கள்
- ↑ [1], 2011 Census of India ABSTRACT INDICATORS
- ↑ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025