புதுவை - 2

(புதுவை 2 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதுவை - 2 (PY 2), வேளாண் வழக்கு; புனிதவதி (Punithavathi) எனப்படும் இந்த நெல் வகை, கண்ணகி மற்றும் கல், 2032 (Kannagi / Cul.2032) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[1]

புதுவை - 2
PY 2
வேளாண் பெயர்
புனிதவதி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
கண்ணகி x கல்,2032
வகை
புதிய நெல் வகை
காலம்
95 - 100 நாட்கள்
மகசூல்
5000 கிலோ எக்டேர்
வெளியீடு
1980
வெளியீட்டு நிறுவனம்
புதுவை வேளாண் அறிவியல் நிலையம்
மாநிலம்
புதுச்சேரி
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1980 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

காலம்

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 95 - 100 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள், சொர்ணவாரி, குறுவை, மற்றும் நவரை பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[3][4]

சாகுபடி

பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[1]

  • இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5000 கிலோவரை (5,0 t/ha) மகசூல் தரக்கூடியது.[3]
  • இவ்வகையின் அரிசி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[3]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "PY 2". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2018-07-01. Retrieved 2018-07-03.
  2. "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). 2018.
  3. 3.0 3.1 3.2 "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). 2018. Retrieved 2018-07-03.
  4. {{cite web |url=http://btistnau.in/SearchVariety.php?variety=PY2 |title=Variety PY2 |publisher=btistnau.in (ஆங்கிலம்) |date= 2018

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=புதுவை_-_2&oldid=442428" இலிருந்து மீள்விக்கப்பட்டது