புத்ததாசர் (Buddhadasa; 27 மே 1906-25 மே 1993) பொதுவாக புத்ததாச பிக்கு என அறியப்பட்ட தாய்லாந்தினைச் சேர்ந்த பௌத்தப் பிக்கு ஆவார். பிரா தர்மகோசார்யா என்பது இவரது துறவறப் பட்டமாகும். இவர் சமூக ஈடுபாடுள்ள பௌத்தத்தின் பிரதிநிதியாகவும் முன்னோடியாகவும் இருந்தார். பௌத்தக் கோட்பாடு, தாய் நாட்டுப்புற நம்பிக்கைகளின் புதுமையான மறுபரிசீலனையாளராக அறியப்பட்ட இவர், தனது சொந்த நாடான தாய்லாந்திலும், வெளிநாடுகளிலும் வழக்கமான மத உணர்வுகளில் சீர்திருத்தத்தை வளர்த்தார். மதங்களின் அத்தியாவசிய இயல்பை ஊடுருவிச் சென்றவர்கள் "எல்லா மதங்களும் உள்நோக்கி ஒரே மாதிரியானவை" என்று கருதுகிறார்கள். அதே நேரத்தில் தருமத்தைப் பற்றிய உயர்ந்த புரிதலைக் கொண்டவர்கள் "மதம் இல்லை" என்று உணர்கிறார்கள் என்ற தனிப்பட்ட பார்வையை இவர் வளர்த்துக் கொண்டார்.[2]

புத்ததாசர்
படிமம்:Buddhadasa118.jpg
சுய தரவுகள்
பிறப்பு
நுவாம் பனிட்

(1906-05-27)27 மே 1906
சாயா மாவட்டம், தாய்லாந்து
இறப்பு25 May 1993(1993-05-25) (aged 86)
சாயா, தாய்லாந்து
சமயம்பௌத்தம்
பாடசாலைதேரவாத பௌத்தம்
தர்மா பெயர்(கள்)இந்தபாஞ்சியோ
துறவுப் பெயர்பிரா தர்மகோசார்யா
துறவற சபைபிரா தர்மகோசார்யா
பதவிகள்
Based inசுவான் மோக்
திருநிலைப்பாடு29.07.1926 [1]
புத்ததாசர்
கையொப்பம்படிமம்:Buddhadasa.gif

வாழ்க்கை வரலாறு

இளமை

புத்ததாசர் 1906-ஆம் ஆண்டு தெற்கு தாய்லாந்தின் சாயா மாவட்டத்தில் உள்ள பான் பும்ரியாங்கில் பிறந்தார். இவரின் தந்தை, சியாங் ஃபனிட், இரண்டாம் தலைமுறை தாய் சீன (கொக்கியன்) வம்சாவளியைச் சேர்ந்த கடைக்காரர் ஆவார். இவரின் தாயார், கிலூயன் தெற்கு தாய்லாந்தைச் சேர்ந்தவர்.[3]

மத வாழ்க்கை

படிமம்:Cremation of Buddhadasa 1993.jpg
1993 இல் புத்ததாசரின் உடல் தகனம்

புத்ததாசர் 1926-ஆம் ஆண்டு பொது வாழ்க்கையைத் துறந்தார். அந்தக் காலத்திலிருந்த இளம் துறவிகளைப் போலவே, இவர் தலைநகர் பேங்காக்கிற்கு கோட்பாட்டுப் பயிற்சிக்காகப் பயணம் செய்தார். ஆனால் அங்குள்ள வாட்கள் அழுக்காகவும், கூட்டமாகவும் இருப்பதைக் கண்டார். இது இவருக்கு அசௌகரியமாக இருந்தது. மேலும், சங்கத்தினர் ஊழல் நிறைந்தவர்களாகவும், பௌத்தத்தின் உயர்ந்த கொள்கைகளில் சிறிதும் அக்கறை இல்லாமல் கௌரவம், பதவி, ஆறுதலில் மூழ்கியவர்களாகவும் இருந்தனர்.[4] இதன் காரணமாக, சொந்த ஊருக்குத் திரும்பி, தனது கிராமத்திற்கு அருகிலுள்ள 50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டு ஒரு காட்டுப் பகுதியை ஆக்கிரமித்து, 1932-இல் சுவான் மோக் என்ற தேரவாத பௌத்த மடாலயத்தை[note 1] நிறுவினார்.

புத்ததாசரின் தத்துவத்தில் ஆர்வமுள்ளவர்களையும், அவரது கொள்கைகளைப் பின்பற்றுபவர்களையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து சமூக வகுப்பினரிடமிருந்தும் சுவான் மோக் ஈர்த்தது. இங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த முன்னணி அறிஞர்களும் மதகுருமார்களும் இவருடன் தொடர்ந்து உரையாடினர். இந்த விவாதங்களில் இவரது நோக்கம், ஒவ்வொரு மதங்களிலும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்வதாகும். 1993-ஆம் ஆண்டு தான் இறப்பதற்கு முன், பன்னாட்டு மாணவர்களுக்கு பௌத்தம், பிற யோகப் பயிற்சிகளைக் கற்பிப்பதில் உதவுவதற்காக, தனது சொந்த ஆசிரமத்தில் பன்னாட்டு தம்ம துறவி மையத்தை நிறுவினார்.[5] 1940களின் முற்பகுதியில், அசல் சுவான் மோக் மிகவும் நெரிசலானதால், அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது.[6][7] அருகிலுள்ள காட்டில் இரண்டாம் சுவான் மோக் (வாட் தான் நாம் லாயில்) ("பாயும் நீரின் கோயில்") 1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சமூகம் அங்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தது.[8]

போதனைகளும் விளக்கங்களும்

 
தனது ஆசிரமத்தில் புத்ததாசர்

"தீமையைத் தவிர்த்து நன்மையை மட்டும் செய், , மனதைத் தூய்மைப்படுத்து" என்ற கௌதம புத்தரின் முக்கிய போதனையைப் பின்பற்றும் முயற்சியில் புத்ததாசர் ஒரு எளிய, தூய்மையான நடைமுறைக்கு பாடுபட்டார். எனவே இவர் சியாமிய மதகுருமார்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய வழக்கமான சடங்குகள் மற்றும் உள் அரசியலைத் தவிர்த்தார். இவரது தாய்மொழியான தெற்கு தாய் மொழியில் சிக்கலான தத்துவ மற்றும் மதக் கருத்துக்களை விளக்கினார்.

புத்தரால் அருளப்பட்ட தியானமுறைகளுள் ஒன்றான ஆனாபானாசதி இவரது முதன்மையான போதனையாகும். இயற்கையான மூச்சினை விழிப்புடன் அவதானிப்பதை மையமாகக் கொண்டது. இருப்பினும், இவரது தனிப்பட்ட பயிற்சி ஒருபுறம் ஆரம்பகால பாலி நூல்களின் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் விளக்கத்திலும், மறுபுறம் அவரது தீவிரமான தனிப்பட்ட பரிசோதனையிலும் அடித்தளமாக இருந்தது.

மறுபிறப்பை நிராகரித்தல்

புத்ததாசர் பாரம்பரிய மறுபிறப்பு மற்றும் கர்மக் கோட்பாட்டை நிராகரித்தார். ஏனெனில் அது சூன்யத் தத்துவத்துடன் பொருந்தாது என்றும், மேலும், துக்கத்தின் அழிவுக்கு உகந்ததல்ல என்றும் கருதினார்.[9]

தாய்லாந்து தேசிய நூலகத்தில் புத்ததாசரின் படைப்புகள் ஒரு முழு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது பிரபலமான புத்தகங்களில் ஒருசில ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.

குறிப்புகள்

  1. From Thai สวน suan "garden" and பாளி வீடுபேறு "release, liberation". Moksha holds the sense of 'shedding ones skin.' See Harris, Moksha: an etymological note, Bauddhamata, 15.6.2009.

மேற்கோள்கள்

  1. Tiyavanich, Kamala (2007). Sons of the Buddha: The Early Lives of Three Extraordinary Thai Masters. Boston: Wisdom Publications. p. 80. ISBN 9780861715367.
  2. Buddhadasa, No Religion பரணிடப்பட்டது மார்ச்சு 20, 2013 at the வந்தவழி இயந்திரம், trans. Punno, 1996.
  3. Suchira Payulpitack, Buddhadasa's Movement: An Analysis of Its Origins, Development, and Social Impact, a Doctorate dissertation, faculty of Sociology, Universität Bielefeld, 1992: 72-3.
  4. Payulpitack, 1992: 123.
  5. "Ajahn Buddhadasa". suanmokkh.org. Retrieved 6 July 2017.
  6. Selin, Helaine (2013). Nature Across Cultures: Views of Nature and the Environment in Non-Western Cultures. Springer Science & Business Media. p. 360. ISBN 978-94-017-0149-5.
  7. Bhikkhu, Buddhadasa (1994). "Foreword". In Bhikkhu, Santikaro (ed.). Heartwood of the Bodhi Tree. Wisdom Publication. pp. ix. ISBN 0-86171-035-5.
  8. Santikaro (1996), Buddhadasa Bhikkhu, p. 154
  9. Buddhadasa 1985a.

ஆதாரங்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

-

Places
Biography
Works and teachings
Other
"https://tamilar.wiki/w/index.php?title=புத்ததாசர்&oldid=442534" இலிருந்து மீள்விக்கப்பட்டது