புரூலி புண் என்பது (ஆங்கிலத்தில் /bəˈrli/ [1] Buruli ulcer அல்லது Bairnsdale ulcer எனப்படுவது) ஒரு தொற்று நோயாகும். இதன் நோய்க்காரணி மைக்கோ பக்டீரியன் அல்சரன்சு (Mycobacterium ulcerans) ஆகும். இதே இனத்தைச் சேர்ந்த பக்டீரியாக்களான மை. ரியூபகுளோசிசு காசநோயையும் மை. லெப்ரே தொழு நோயையும் ஏற்படுத்துகின்றன.

புரூலி புண்
படிமம்:Buruli ulcer left ankle EID.jpg
கானாவைச் சேர்ந்த ஒருவரின் குதிக்காலில் உள்ள புரூலி புண்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10A31.1 (ILDS A31.120)
ஐ.சி.டி.-9031.1
நோய்களின் தரவுத்தளம்8568
ம.பா.தD009165

குணங்குறிகள்

படிமம்:Buruli ulcer ear infant Australia.png
பக்டீர்யா தொற்றுடனான் 18மாதக் குழந்தையின் காது- and PCR-confirmed Buruli ulcer who briefly visited St Leonards, Victoria, ஆத்திரேலியா, in 2001.

தொற்று பொதுவாக தோலின் கீழ் ஏற்படும் வலியற்ற திரட்சிகள் மூலம் இனங்காணமுடியும். தென் அவுத்திரெலியாவில் தோலின் மேற்பரப்பில் பருக்கள் தோன்றுவதுடன் கூட இதன் அறிகுறிகள் தொடங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது. கைகள் பாதம் என்பவற்றில் அறிகுறிகள் தோன்றுவதிலும் பார்க்க முன்கைப்பகுதில் மற்றும் சூழலுக்கு வெளிக்காட்டப்படும் பகுதிகளில் அதிகம் ஏற்படும். குழந்தைகளில் முகம் வயிறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது நோயின் உச்சகட்டத்தில் வீக்கத்துடன் காய்ச்சல் ஏற்படும்.

சான்றுகள்

  1. Macquarie Dictionary, eighth edition, 2020

வெளியிணைப்புகள்

  • SciDev.net கட்டுரை [1]

படத்தொகுப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=புரூலி_புண்&oldid=442801" இலிருந்து மீள்விக்கப்பட்டது