புளியோதரை
புளியோதரை (puliyodharai) அல்லது புளியோதுரை, புளி சாதம் தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் காரம் சேர்த்து புளியால் தயாராக்கபட்ட சாந்தை சாதத்தில் கலந்து தயாரிக்கபடும் பரவலான உணவு ஆகும். இது பெரும்பாலும் வைணவக் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டாலும், வீட்டில் சமைத்தும் உண்பர். புளி+ ஓரை (சமைத்த அரிசி) = புளியோரை. புளியோரை என்பதே பின்னர் மருவி புளியோதரை என்றாகியது. கன்னடத்தில் ஹுளியன்னா (புளி + அன்னம்) எனவும் தெலுங்கில் புலிஹோரா (புளி + ஓரை) என்றும் அழைக்கின்றனர். தமிழ் பிராமண அய்யங்கார்களே இதை அதிகம் விரும்பி உண்பர். புளிக் கரைசல், வேர்க்கடலை, மிளகாய், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியனவற்றை வெந்த அரிசியுடன் கலந்து புளியோரை செய்யப்படும்.[3] இது விரைவில் கெடாது என்பதால் நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள் இதை கட்டுச்சோறாக எடுத்துச் செல்வார்கள்.
| பகுதி | தென்னிந்தியா |
|---|---|
| முக்கிய சேர்பொருட்கள் | நெல், முருகல், நாரத்தம் அல்லது புளி |
| வேறுபாடுகள் | முருகல், நாரத்தம் அம்புலா (மாவடு), புளி, எலுமிச்சை, தேசிப்பழம், நாரத்தம், வெங்காயம்[1][2] |
சான்றுகள்
- ↑ "Pulihora recipe | How to make pulihora (chintapandu pulihora)". Swasthi's Recipes (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-08-16. Retrieved 2021-04-20.
- ↑ "Pulihora". N.T.R District. Retrieved 20 October 2022.
- ↑ "புளியோதரை". Archived from the original on 2015-06-03. Retrieved ஆகத்து 22, 2015.