புஷ்பகிரி
புஷ்பகிரி (Pushpagiri) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தின் லங்குடி மலையில் அமைந்த பண்டைய பௌத்த தொல்லியல் வளாகம் ஆகும். இவ்வளாகம் சிதிலமடைந்த தூபிகளும், விகாரைகளும், குடைவரைச் சிற்பங்களும் கொண்டது. இது அசோகரின் தூண்கள் கொண்ட தொல்லியல் களமாகும்.
| புஷ்பகிரி | |
|---|---|
| படிமம்:Pushpagiri (Langudi Hill) - Jajpur - Odisha - Buddhist site - Rock-Cut Stupas - 2.JPG புஷ்பகிரி விகாரையின் முக்கியத் தூபி | |
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | India |
| புவியியல் ஆள்கூறுகள் | 20°38′30″N 86°16′09″E / 20.6416°N 86.2692°E |
| சமயம் | பௌத்தம் |
| மாநிலம் | ஒடிசா |
| செயற்பாட்டு நிலை | பாதுகாக்கப்பட்டது. |
பௌத்தத் தலங்களை காண, இந்தியாவிற்கு வருகை தந்த சீன நாட்டின் பௌத்த அறிஞர் சுவான்சாங் (602 - 664), தனது பயணக் குறிப்பில் புஷ்பகிரி மகாவிகாரையைக் குறித்துள்ளார்.
புஷ்பகிரி இப்பௌத்தத் தலம், ஒடிசாவின் யாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லலித்கிரி, இரத்தினகிரி உதயகிரி-கந்தகிரி போன்று முன்பு செழிப்புடன் விளங்கியதாகும்.
லங்குடி மலையின் தொல்லியல் வளாகத்தில் 1996 - 2006களில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த கல்வெட்டு அடிப்படையில், புஷ்பகிரி பௌத்த தொல்லியல் வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்பௌத்த வளாகம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி11ம் நூற்றாண்டு வரை செழிப்புடன் விளங்கியதாகும். [1]
1996 - 2006ல் லாங்குடி மலையில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் அகழாய்வு செய்த போது, பிராமி எழத்துக்கள் கொண்ட கல்வெட்டுக் குறிப்பில் இப்பகுதியை புஷ்பகிரி என அறியப்பட்டது. [2]
புஷ்பகிரி அகழாய்வின் போது, பெரிய தூபியும், சுடுமட்சிலைகளும் கண்டெடுக்கபப்ட்டது. புஷ்பகிரி விகாரை மற்றும் தூபிகள், பேரரசர் அசோகர் காலத்தில் (கிமு 304–232), கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3]
கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் பல்வேறு அளவுகளில் வடிக்கப்பட்ட 34 குடைவரை தூபிகளையும், குடைவரைச் சிற்பங்களையும், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கண்டுபிடித்தது.
படக்காட்சிகள்
-
சிதிலமடைந்த பௌத்த பெருந்தூபியின் அடிப்பகுதி
-
குடைவரை தூபிகள்
-
பாலி மொழியில் எழுத்தப்பட்ட கல்வெட்டுக்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Scott L. Montgomery; Alok Kumar (2015). A History of Science in World Cultures: Voices of Knowledge. Routledge. p. 121. ISBN 9781317439066.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ U Mishra. "Religious Landscape of Orissa - From 5th to 12th centuries" (PDF). INFLIBNET. Retrieved 24 December 2015.
- ↑ Ashoka stupa found in Orissa