பூசா மாவட்டம்
பூசா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Pusa; ஆங்கிலம்: Pusa District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். பூசா மாவட்டத்தின் தலைநகரம் பூசா (Pusa) நகரம்.[2]
பூசா மாவட்டம் Pusa District Daerah Pusa | |
|---|---|
| படிமம்:Map of Pusa District, Sarawak.svg | |
| ஆள்கூறுகள்: 1°35′0″N 111°15′0″E / 1.58333°N 111.25000°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| பிரிவு | பெத்தோங் பிரிவு |
| மாவட்டங்கள் | பூசா மாவட்டம் |
| நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
| அஞ்சல் குறியீடு | 94950[1] |
சரதோக் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பெரும்பான்மையாக பூர்வீக மீன்பிடிக் கிராமங்களைக் கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல் ஆகும்.[3]
பொது
பூசா நகரம் "ஈக்கான் தெருபோக்" (Ikan Terubok) என்று அழைக்கப்படும் வெங்கணை (Toli shad) மீன்களுக்கும்; மற்றும் "கூலா அப்போங்" (Gula Apong) என்று அழைக்கப்படும் பனை சர்க்கரைக்கும் (Palm Sugar) பிரபலமானது.
மேற்கோள்கள்
- ↑ "Pusa, Sarawak Postcode List - Malaysia Postcode". postcode.my. Retrieved 2 October 2024.
- ↑ "Malaysia Districts". Statoids.com. Retrieved 3 November 2010.
- ↑ "Malaysia: Administrative Division". City Population. Retrieved 30 January 2019.