பெக்கெரலைட்டு
பெக்கெரலைட்டு (Becquerelite) என்பது Ca(UO2)6O4(OH)6•8(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். யுரேனியத்தின் கனிமம் என்று இது வகைப்பட்டுத்தப்படுகிறது. இரண்டாம்நிலை கனிமமான இதில் கால்சியம் கலந்துள்ளது. பெக்கெரலைட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் மோவின் அளவுகோலில் கடினத்தன்மை 2 என்ற மதிப்புடன் காணப்படுகிறது.
| பெக்கெரலைட்டு Becquerelite | |
|---|---|
| படிமம்:Becquerelite-Uranophane-Uraninite-201144.jpg பழைய சின்கோலோப்வே சுரங்கத்திலிருந்து யுரேனோஃபேன் ஊசிகளுடன் பெக்கரலைட் படிகங்களின் தெளிப்பு | |
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | Ca(UO2)6O4(OH)6•8(H2O) |
| இனங்காணல் | |
| படிக இயல்பு | போலி அறுகோண வெளிக்கோடை படுவெளிப்படுத்தும் அட்டவணைப் படிக தெளிப்பு படிகங்கள்; பூச்சுகள் மற்றும் சிறந்த பொதிகள் |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
| பிளப்பு | {001} இல் தெளிவு; {101} {010} மற்றும் {110} இல் தெளிவில்லை, |
| விகுவுத் தன்மை | னொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
| கீற்றுவண்ணம் | மஞ்சள் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 5.09 - 5.2 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.725 - 1.735 nβ = 1.815 - 1.825 nγ = 1.825 - 1.830 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.100 |
| பலதிசை வண்ணப்படிகமை | X = நிறமற்றது முதல் வெளிர் மஞ்சள் வரை, Y = Z = மஞ்சள் முதல் ஆழ் மஞ்சள் வரை |
| 2V கோணம் | அளக்கப்பட்டது: 32° |
| பொதுவான மாசுகள் | பொதுவாக ஈயம் கலந்திருக்கும் |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1][2][3] |
1896 ஆம் ஆண்டு கதிரியக்கத்தன்மையைக் கண்டுபிடித்த பிரெஞ்சு இயற்பியலாளர் அன்டோயின் என்றி பெக்கெரலை (1852-1908) சிறப்பிப்பதற்காக கனிமத்திற்கு பெக்கெரலைட்டு எனப் பெயரிடப்பட்டது. பெக்கெரலைட்டின் எடையில் 70% யுரேனியம் உள்ளது.
முன்னதாக சையர் என்றழைக்கப்பட்ட காங்கோ மக்களாட்சிக் குடியரசுவின் கசோலோவில் பெக்கெரலைட்டு கனிமம் வெட்டியெடுக்கப்படுகிறது.