பெண்ணாடம் (ஆங்கிலம்:Pennadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் அருகில் தென் திசை நோக்கி 9 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் மாவட்டம் எல்லையான ஆலத்தியூர் கிராமத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகளில் ஒன்றான ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது.[3] இதன் தொடர்ச்சியான ரயில்வே வழித்தடத்தில் ஈச்சங்காடு தொடருந்து நிலையம் தொடர்ந்து பெண்ணாடம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

பெண்ணாடம்
பெண்ணாடம்
இருப்பிடம்: பெண்ணாடம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E / 11.4; 79.23
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் திட்டக்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

19,494 (2011)

1,541/km2 (3,991/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

12.65 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi)

54 மீட்டர்கள் (177 அடி)

இணையதளம் www.townpanchayat.in/pennadam
படிமம்:Pennadam Railway Station.jpg
பெண்ணாடம் தொடருந்து நிலையம்

அமைவிடம்

விருத்தாசலம்அரியலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெண்ணாடம் பேரூராட்சிக்கு வடகிழக்கே விருத்தாச்சலம் 18 கி.மீ.; மேற்கில் திட்டக்குடி 13 கி.மீ.; தொழுதூர் 26 கி.மீ.; தென்மேற்கே பெரம்பலூர் 51 கி.மீ.; வடக்கே உளுந்தூர்பேட்டை 41 கி.மீ.; தெற்கே அரியலூர் 40 கி.மீ.; திருச்சி 100 கி.மீ.; மற்றும் தஞ்சாவூர் 85 கி.மீ.; தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் மாவட்டத் தலைமை நகரமான கடலூர் 80 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

12.65 ச.கி.மீ. பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 164 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,708 வீடுகளும், 19,494 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1005 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E / 11.4; 79.23 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 54 மீட்டர் (177 அடி) உயரத்தில் இருக்கின்றது

கோயில்கள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. https://www.tradeindia.com/Seller-10341843-The-Ramco-Cements-Limited/
  4. பெண்ணாடம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Pennadam Population Census 2011
  6. "Pennadam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்
  8. "சுடர்கொழுந்தீசர் கோயில்". Archived from the original on 2018-04-02. Retrieved 2018-03-18.


"https://tamilar.wiki/w/index.php?title=பெண்ணாடம்&oldid=447402" இலிருந்து மீள்விக்கப்பட்டது