பெம்பான் (ஆங்கிலம், மலாய் மொழி: Bemban) என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு சிறுநகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 23 கி.மீ.; ஜாசின் நகரத்தில் இருந்து 6 கி.மீ.; தொலைவில் இருக்கிறது.

பெம்பான்

Bemban

படிமம்:Bemban.JPG
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
நகராண்மைக் கழகம்வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம்
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்நிங் சூன் கூன் (2013 - 2018)
நேர வலயம்ஒசநே+8 (MST)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
அஞ்சல் குறியீடு
77500
இடக் குறியீடு06
இணையதளம்www.mpjasin.gov.my/en/

இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. அதன் பெயர் பெம்பான் வெந்நீர் ஊற்று (Kolam Air Panas Bemban). தொலைதூர இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த வெந்நீர் ஊற்றுக்கு வருகை புரிகின்றனர்.[1][2]

இந்த நகருக்கு மிக அருகில் இருப்பது ஆயர் குரோ தொழில்துறை நகரமாகும். இந்தச் சிறுநகரத்தில், மலாய்க்காரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். முன்பு, இந்தப் பகுதியில் கணிசமான அளவிற்கு ரப்பர் தோட்டங்கள் இருந்தன.

ஜாசின், ஆயர் குரோ நகரங்களின் மேம்பாட்டு காரணங்களுக்காக அந்த ரப்பர் தோட்டங்கள் துப்புரவு செய்யப்பட்டு விட்டன. ரப்பர் தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள், ஜாசின், மலாக்கா நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.

அருகாமை நகரங்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெம்பான்&oldid=447953" இலிருந்து மீள்விக்கப்பட்டது