பெர்மைட்டு
பெர்மைட்டு (Fermiite) என்பது Na4(UO2)(SO4)3•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3] ஓர் அரிய யுரேனியம் கனிமமான இக்கனிமம் ஓப்பன்னைமரைட்டு, மெய்சரைட்டு, பெலகோவ்சுகைட்டு, நேட்ரோசிபைட்டு மற்றும் பிளாசிலைட்டு ஆகிய கனிமங்களுடன் வேதியியல் ரீதியாக தொடர்பு கொண்டுள்ளது. மெய்சரைட்டு கனிமம் பெர்மைட்டுடன் கட்டமைப்பு ரீதியாக தொடர்பு கொண்டதாகும்.[4][5][6][7][8] அமெரிக்காவின் உட்டா மாநிலத்திலுள்ள சான் இயூவான் மாகாணத்தில் உள்ள புளூ லிசார்ட்டு சுரங்கத்தில் பெர்மைட்டு கனிமம் கிடைக்கிறது. பல அரிய யுரேனியம் தாதுக்களுக்கு இக்கனிமம் பெயர் பெற்றதாகும்.[2][9] பெர்மைட்டு என்ற பெயர் அணுக்கரு உலைக்காக அறியப்படும் என்ரிகோ பெர்மியை (1901–1954) கௌரவிக்கிறது.
| பெர்மைட்டு Fermiite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | சல்பேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Na4(UO2)(SO4)3•3H2O |
| இனங்காணல் | |
| நிறம் | வெளிர் பச்சை-மஞ்சள் |
| படிக இயல்பு | பட்டகம் |
| படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
| பிளப்பு | இல்லை |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| அடர்த்தி | 3.31 (கணக்கிடப்பட்டது); 3.23 (அளக்கப்பட்டது) |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nα=1.52, nβ=1.53, nγ=1.57 (தோராயம்) |
| பலதிசை வண்ணப்படிகமை | நிறமற்றது (X & Y), வெளிர் பச்சை-மஞ்சள் (Z) |
| 2V கோணம் | 50o (கணக்கிடப்பட்டது) |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்மைட்டு கனிமத்தை Fmi[10] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கூட்டமைப்பு
பெர்மைட்டு கனிமம் ஓப்பன்னைமரைட்டு, புளூலிசார்டைட்டு, வெதெரில்லைட்டு, பிளாடைட்டு, மாங்கனோபிளாடைட்டு, சால்காந்தைட்டு, எப்சோமைட்டு, ஜிப்சம், மக்னீசியம் சல்பேட்டு, குரோகைன்கைட்டு, சைடெரோனாட்ரைட்டு மற்றும் தமருகைட்டு போன்ற பல சல்பேட்டு தாதுக்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு சேர்ந்து காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ Kampf, A.R., Plášil, J., Kasatkin, A.V., Marty, J., and Čejka, J., 2015. Fermiite, Na4(UO2)(SO4)3•3H2O and oppenheimerite, Na2(UO2)(SO4)2•3H2O, two new uranylsulfate minerals from the Blue Lizard mine, San Juan County, Utah, USA. Mineralogical Magazine 79(5), 1123-1142
- ↑ 2.0 2.1 "Fermiite: Fermiite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ 3.0 3.1 Kampf, A.R., Plášil, J., Kasatkin, A.V., Marty, J., and Čejka, J., 2015. Fermiite, Na4(UO2)(SO4)3·3H2O and oppenheimerite, Na2(UO2)(SO4)2·3H2O, two new uranyl sulfate minerals from the Blue Lizard mine, San Juan County, Utah, USA. Mineralogical Magazine 79(5), 1123-1142
- ↑ "Oppenheimerite: Oppenheimerite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Meisserite: Meisserite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Belakovskiite: Belakovskiite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Natrozippeite: Natrozippeite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Plášilite: Plášilite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Blue Lizard Mine, Chocolate Drop, Red Canyon, White Canyon District, San Juan Co., Utah, USA - Mindat.org". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.