பாடி அப்டன் (Paddy Upton , பிறப்பு: நவம்பர் 5 1968, எனபவர் விளையாட்டு வீரர்களின் மனவளப் பயிற்சியாளர், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரராவார்.[1][2] இவர் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு அறிவியலாளர்களுக்கும் மனவளப் பயிற்சியாளராகவுள்ளார். மேலும் டீக்கின் பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பேராசிரியராகவுமுள்ளார். கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டமும் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிகப் பயிற்றுநர் துறையில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் பெற்றவராவார்.

தொடக்கத்தில் துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். பின்னர் பயிற்சியாளராக மாறி தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி (1994–1998) பயிற்சியாளராகவும் மேற்கு மாகாண ரக்பி அணி உள்ளிட்ட அணிகளை வழிநடத்தினார்.[3]

இந்திய விளையாட்டுத்துறை

கேரி கிர்ஸ்டன் பரிந்துரையில் 2008 இல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் மனப்பக்குவப் பயிற்றுநராகவும் தலைமைத்துவ வியூகப் பயிற்றுநராகவும் செயல்பட்டார்.[4] இந்த மூன்றாண்டு காலக்கட்டத்தில் இந்திய தேர்வுத் துடுப்பாட்டம் அணி ஐசிசியின் தரவரிசையில் முன்னணியில் இருந்தது, 2011 இல் துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். ஜூலை 2022 காலக்கட்டத்தில் மேற்கிந்தியத் துடுப்பாட்டப் பயணத்தில் இந்திய பயிற்சியாளராக வழிநடத்தினார்.[5] 2012 இல் புனே வாரியர்சு அணியின் தலைமைப் பயிற்சியாளர், 2013 முதல் 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி என்று இந்திய பிரீமியர் அணிகளுக்குப் பயிற்சியளித்துள்ளார்[6] குகேஷ் தொம்மராஜு உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் மனவளப் பயிற்றுநராக இருந்துள்ளார்.[7]

மேற்கோள்கள்

  1. Hoar, Sharleen; Consultant, Performance Psychology (18 August 2011). "What is Mental Coaching and How Can You Benefit?".
  2. "What is Executive Coaching? - DesignIntelligence". Archived from the original on 24 July 2017. Retrieved 5 June 2018.
  3. "Paddy Upton". Speakers of Note. Archived from the original on 5 May 2009. Retrieved 26 August 2017.
  4. "Cricket Score, Schedule, Latest News, Stats & Videos". Cricbuzz. Retrieved 26 August 2017.
  5. "India bring back Paddy Upton as mental conditioning expert". ESPNcricinfo. Retrieved 2022-07-26.
  6. Faizan Lakhani. "Moin Khan, Mickey Arthur among head coaches for PSL teams". Geo TV. Retrieved 26 August 2017.
  7. "Gukesh brings mind guru Paddy Upton on board in battle against Ding Liren". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 2024-10-29. Retrieved 2024-12-14.
"https://tamilar.wiki/w/index.php?title=பேடி_அப்டன்&oldid=450270" இலிருந்து மீள்விக்கப்பட்டது