பைரவி (இறைவி)
பைரவி என்பவர் ஒரு இந்து தெய்வமும் தச மகாவித்யாக்களுள் ஒருவரும் ஆவார். அவர் கால பைரவரின் துணைவியார். பார்வதி தேவியின் அம்சமான பைரவி இந்துக்களால் வணங்கப்படுகிறாள்.
| பைரவி | |
|---|---|
| படிமம்:Goddess Bhairavi.jpg இறைவி பைரவி | |
| வகை | தேவி, தச மகா வித்யா |
| துணை | பைரவன் |
வீர பைரவி, திரிபுரா பைரவி, கால பைரவி, சித்த பைரவி, சைதன்ய பைரவி மற்றும் ருத்ர பைரவி என்று பல பெயர்களில் பைரவி வணங்கப்படுகிறாள். சண்டன், முண்டன், துர்க்காசுரன் போன்ற அரக்கர்களை அழித்தவளாக வணங்கப்படுகிறாள்.
குண்டலினி
பைரவி என்பது குண்டலினி மற்றும் தந்திரக் கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு பெண்ணைக் குறிக்கும் பெயராகும். தந்திரக் கலையைக் கற்கும் அல்லது அதில் ஈடுபடும் பெண் யோகினி என்று அழைக்கப்படுகிறார். அறுபத்து நான்கு யோகினிகளின் உதவியுடன் தந்திரக் கலையில் முழுமை பெற்றவர் பைரவி எனப்படுகிறார். யோகினிகள் அல்லது ஜோகினிகள் என்பவர்கள் மொத்தம் அறுபத்து நான்கு பேர் ஆவர். இவர்கள் பைரவிக்குத் துணையாக இருக்கும் பெண் தெய்வங்களாகவும் கருதப்படுகின்றனர். இந்த அறுபத்து நான்கு யோகினிகளுக்கும் பைரவியே முதன்மையான தலைவராக விளங்குகிறார். அதேபோல் பைரவர் என்பவருக்கு ஐம்பத்து இரண்டு பைரவர்கள் துணை அதிகாரங்களாக உள்ளனர். புராணங்கள் மற்றும் தந்திர நூல்களின்படி பைரவி என்பவர் பைரவரின் துணைவியார் ஆவார். தந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் அறுபத்து நான்கு யோகினிகள், ஐம்பத்து இரண்டு பைரவர்கள் மற்றும் ஐம்பத்து ஆறு காலவர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
பைரவி சுபங்கரி என்றும் அழைக்கப்படுகிறார். இதற்குத் தன் குழந்தைகளாகிய பக்தர்களுக்கு நன்மைகளைச் செய்பவர் என்று பொருளாகும். அவர் ஒரு சிறந்த தாயாகக் கருதப்படுகிறார். அதே வேளையில் அறநெறி தவறியவர்களுக்கும் கொடூரமானவர்களுக்கும் வன்முறை, தண்டனை மற்றும் அழிவைத் தருபவராகவும் அவர் இருக்கிறார். இத்தகையோருக்கு அவர் வன்முறையின் தாயாகத் திகழ்கிறார். தோற்றத்தில் அச்சமூட்டுபவராகவும் கடுமையானவராகவும் காட்சியளித்தாலும் தன் குழந்தைகளுக்கு அவர் என்றும் கனிவான தாயாகவே விளங்குகிறார்.
திரிபுரா பைரவி தோற்றம்
திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடன் சேர்ந்து பார்வதி தேவி பைரவியாக நடனமாடியதாக நம்பப்படுகிறது. அவள் பயங்கர தோற்றத்துடன் கழுதையை வாகனமாக கொண்டவள். சிவரூபம் என்பதால் நெற்றிக்கண்ணும், நான்கு கரங்களும், புலித்தோல் ஆடையும் உடையவள்.
சொர்ண பைரவி
சுவர்ண பைரவரின் அரவணைப்பில் பைரவின் மடியில் அமர்ந்திருக்கும் பைரவி சொர்ண பைரவி என்று அழைக்கப்பெறுகிறாள்.
லிங்க பைரவி
சேலம், சாமிநாயக்கன்பட்டியில், "லிங்க பைரவி' சிலையை சற்குரு ஜக்கி வாசுதேவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.[1]