போளூர் எம் வரதன் (Polur M. Varadhan) ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

போளூர் ம. வரதன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்ஈ. கோதண்டம்
பின்னவர்ஈ. கோதண்டம்
தொகுதிதிருப்பெரும்புதூர்
பதவியில்
2001–2006
முன்னையவர்கொ. வீ. நன்னன்
தொகுதிசெங்கம்
பதவியில்
2006–2011
பின்னவர்டி. சுரேஷ்குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 பிப்ரவரி 1952
கீழ்கரிக்கத்தூர், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
இறப்புJanuary 27, 2011(2011-01-27) (aged 58)
சென்னை, தமிழ்நாடு
துணைவர்பிரேமா
பிள்ளைகள்இராசீவ்
பணிஅரசியல்வாதி

வரதன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா கீழ்கரிக்கத்தூர் கிராமத்தில் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாள் பிறந்தார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு சனவரி 27ஆம் நாள் உயிர் நீத்தார்.[5][6]

மேற்கோள்கள்

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 399-401.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  5. "காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் காலமானார்". Dina Mani. 27 January 2011 இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110814174517/http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=367648&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=. பார்த்த நாள்: 27 January 2011. 
  6. "Congress MLA Varadhan dead". The Hindu. 28 January 2011 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023040402/http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1131196.ece. பார்த்த நாள்: 28 January 2011. 
"https://tamilar.wiki/w/index.php?title=போளூர்_வரதன்&oldid=454369" இலிருந்து மீள்விக்கப்பட்டது