ப்ரீத்தி குலுங் ராய் (Preeti Rai) இவர் நேபாளத்தில் அமைந்துள்ள காத்மண்டுவில் 2004 ஆண்டு, ந்வம்பர் மாதம், 21 ம் தேதி பிறந்தார். ப்ரீத்தி ஒரு கால்பந்து வீராங்கனை ஆவார். இவர் கிக்ஸ்டார்ட் எப்சி மற்றும் நேபாள தேசிய மகளிர் அணிக்காக மிட் பீல்டராக விளையாடி வருகிறார். ராய், 2021 ஆண்டு, செப்டம்பர் 9 ம் தேதியன்று தசரத் ஸ்டேடியத்தில் பங்களாதேஷுக்கு எதிரான பிபா நட்புரீதியான போட்டியில் நேபாள தேசிய மகளிர் கால்பந்து அணிக்காக பங்கேற்று விளையாடினார். தனது 16 வயதில், ராய் தனது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினார் மேலும் 22 வது நிமிடத்தில் ஒரு அற்புதமான கோலை அடித்ததன் மூலம் அவரின் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தினார்.[1]

ப்ரீத்தி ராய்
சுய தகவல்கள்
முழுப் பெயர்ப்ரீத்தி குலுங் ராய்
பிறந்த நாள்நவம்பர் 21, 2004 (2004-11-21) (அகவை 21)
பிறந்த இடம்நேபாளத்தில் அமைந்துள்ள காத்மண்டு
உயரம்1.58 m (5 அடி 2 அங்)
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
காவல் படை கால்பந்து அணி
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
கிக்ஸ்டார்ட் எப்சி
பன்னாட்டு வாழ்வழி
நேபாள தேசிய மகளிர் கால்பந்து அணி(5)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

ராய் நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சந்திர பிரசாத் ராய் மற்றும் ஞானமயா ராய் ஆஅகியோரின் மகள் ஆவார். [2] ப்ரீத்தி குலுங் ராய் நேபாளத்தில் உள்ள சாரதா அகாடமியில் பயின்றார். இவர் தனது ஆறு வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கினார்.[3]

தொழில் வாழ்க்கை

ராய் 2024 மேற்கு ஆசிய கால்பந்து பெடரேசன் மகளிர் சாம்பியன்ஷிப்பில் நேபாள மகளிர் தேசிய கால்பந்து அணியின் ஒரு பகுதியாக இருந்தார். நேபாள அணி போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.[4]

விளையாட்டு பாணி

ப்ரீத்தி ராய் முதன்மையாக ஒரு மிட் பீல்டராக தன்னை தெரியபடுத்திக் கொண்டார். இங்கு இவரது விளையாட்டு பாணி இவரது விளையாடும் திறன்கள், தொலைநோக்கு பார்வை மற்றும் தொழில்நுட்ப திறன்களால் வரையறுக்கப்படுகிறது. மிட் பீல்டிலிருந்து ஆட்டத்தை கட்டுப்படுத்தும், துல்லியமான பாஸ்களை அதாவது நுணுக்கங்களை வழங்கும் மற்றும் தனது அணி வீரர்களுக்கு கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் அற்புதமான திறனை ராய் கொண்டிருந்தார். துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் உதவிகளை வழங்குவதில் இவரது திறமை இவரை இவரது கிளப் மற்றும் நேபாள தேசிய மகளிர் அணி இரண்டிற்கும் ஒரு மதிப்புமிக்க சொத்தாக மாற்றி இருந்தது.

மேற்கோள்கள்

  1. Football, Gorkhali (2024-05-21). "Preeti Rai's debut match for Nepal shines: Player of the match". gorkhalifootball.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-05-21.
  2. "१६ वर्षको उमेरमै महिला राष्ट्रिय फुटबल टिममा 'डेब्यु' गरेकी प्रीति राई". Kendrabindu (in ஆங்கிலம்). Retrieved 2024-04-13.
  3. "Rising star Preeti Rai sets sights on SAFF Championship redemption - OnlineKhabar English News" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-03-12. Retrieved 2024-04-13.
  4. राई, अनिता भेटवाल र गोपेन राई :: फिल्डमा फर्किन आतुर प्रीति. "फिल्डमा फर्किन आतुर प्रीति राई". फिल्डमा फर्किन आतुर प्रीति राई. Retrieved 2024-04-13.
"https://tamilar.wiki/w/index.php?title=ப்ரீத்தி_ராய்&oldid=455153" இலிருந்து மீள்விக்கப்பட்டது